scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 20, 2014

முறைப்படி அரசாணை வெளியீடு: தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகள் உதயம்- 12 மாநகராட்சிகள் ஆனது

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி,  சேலம்,  வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. தஞ்சை,  திண்டுக்கல் நகராட்சிகள்  மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படும் என கடந்த ஆண்டு  ஏப்ரல் 10ம் தேதி சட்டசபையில் முதல்
வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து  அதற்கான பணிகள் தொடங்கின. மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக தஞ்சையும், 12வது  மாநகராட்சியாக திண்டுக்கல்லும் நேற்று தரம்  உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணையை  தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்ரி கோபாலிடமும், திண் டுக்கல் நகராட்சி தலைவர்  மருதராஜுவிடமும் முதல்வர் ஜெயலலிதா  நேற்று வழங்கினார். இதையடுத்து, தற்போதைய நகராட்சி தலைவராக இருக்கும் சாவித்ரி கோபால் தஞ்சை  மாநகராட்சியின்  முதல் மேயராகவும், திண்டுக்கல் நகராட்சி தலைவராக இருக்கும்  மருதராஜ், திண்டுக்கல் மாநகராட்சியின்  முதல் மேயராகவும் அவர் பதவியேற்க  உள்ளனர்.

தஞ்சையின் முதல் மேயராக பதவியேற்க உள்ள சாவித்ரி கோபாலுக்கு, மாநகராட்சி  கூட்டங்களில் அவர்  அணிவதற்கும், பொது நிகழ்ச்சிகளில் அணிவதற்கும் 2 அங்கிகள்  தயார் செய்யப்பட்டன. வெள்ளி  செங்கோல், தங்க ஆரம் ஆகியவையும் உருவாக்கப்பட்டு  உள்ளது. வரும் 23ம் தேதி தஞ்சையில் மேயர்  பதவி ஏற்பு விழா நடைபெறும் என  தெரிகிறது. இதேபோல், திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்க உள்ள  மருதராஜுக்கு, மாமன்ற  கூட்டத்தில் பங்கேற்பதற்காக 110 பவுனில் டாலர் செயின், சுமார்  3 கிலோ எடை கொண்ட வெள்ளி  செங்கோல் தயாரிக்கப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட  கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, மேயருக்கான பதவி  ஏற்பு விழா நாளை (பிப். 21) மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாநிலத்தின் 11வது  மாநகராட்சியாக தஞ்சையும், 12வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் தரம் உயர்த்  தப்பட்டதையடுத்து, மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு நகராட்சி ஊழியர்கள் இனிப்பு  வழங்கி பட்டாசு  வெடித்து கொண்டாடினர்.

No comments:

Post a Comment