scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

March 10, 2015

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2 (நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆயிரத்து 130 குரூப் 2 பணியிடங்களுக்கான பிரதானத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 9) வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற 5 ஆயிரத்து 500 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் மார்ச் 26 முதல் தொடங்கவுள்ளன. இதற்கான தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. சென்னை பிராட்வேயிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இதன்பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

January 29, 2015

குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - நிகழாண்டு போட்டித் தேர்வு பட்டியல் நாளை வெளியாகும் - அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் பேட்டி

50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் 2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி பணி ஒதுக்கீடு ஆணை நேற்று 103 பேர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டது. முதலில் ஏ.இளவரசன், எஸ்.ரேவதி, ஏ.கணேசன், எஸ்.சதீஷ், ஏ.பாபு, ஏ.கற்பகராஜா, எம்.முருகானந்தம் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தேர்வாணைய அலுவலகத்தில் வழங்கினார். அருகில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் இருந்தார். வருடாந்திர தேர்வு பட்டியல் நாளைவெளியீடு பின்னர் சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் தேர்வுகள் விவரம், அந்த தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள், எந்த தேதி முதல் எந்த தேதிவரை விண்ணப்பிக்கலாம். எந்த தேதியில் எழுத்து தேர்வு ஆகிய அனைத்து விவரங்களும் கொண்ட வருடாந்திர அட்டவணை பட்டியல் நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். நடந்து முடிந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முதல் கட்டமாக முடிந்து 103 பேர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை அவர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு வருவாய்த்துறை நடத்தும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிக்கான இடத்தை பெறலாம். தொடர்ந்து பிப்ரவரி 12-ந்தேதி வரை கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற உள்ளது. புதிய குரூப்-1 தேர்வு நடந்து முடிந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு முடிவு 2 வாரத்தில் வெளியிடப்படும். புதிதாக குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அதற்கான காலிப்பணி இடம் விவரங்கள் இன்னும் துறைவாரியாக வந்து சேரவில்லை. ஏறத்தாழ 50 இடங்களுக்கு குரூப்-1 தேர்வு அறிவிக்கப்படும். உதவி வேளாண்மை அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் 447 உள்ளன. அதற்கான அறிவிப்பு வர உள்ளது. இதற்கு பிளஸ்-2 படித்துவிட்டு வேளாண்மை குறித்த டிப்ளமோ படித்திருக்க வேண்டும். வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள் இதை விண்ணப்பிக்க முடியாது. ஆனால் வேளாண்மை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அவர்கள் வேளாண்மை குறித்த டிப்ளமோ படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் வேதியியல் நிபுணர் பதவிக்கு காலிப்பணியிடங்கள் 3 மட்டுமே உள்ளன. இந்த பணிக்கு எம்.எஸ்.சி. வேதியியல் படித்திருக்க வேண்டும். இண்டஸ்ட்ரி வேதியியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.

December 21, 2014

இன்று நடந்த GROUP IV தேர்வுக்கான உத்தேச விடைகள்

CLICK HERE FOR GROUP IV ANSWER KEY

இன்று குரூப் 4 தேர்வு- வீடியோவில் கண்காணிக்க தேர்வுத் துறை உத்தரவு

தமிழகத்தில் இன்று குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களையும் ஆன்லைன் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும். இந்த தேர்வை எழுதுவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

December 15, 2014

VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/
தேர்வான நண்பர்கள் ஜனவரி இறுதிக்குள் பணிநியமணம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

December 12, 2014

TNPSC GROUP II NON-INT EXAM RANK AND MARKS PUBLISHED

Posts included in Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) - (Group-II A Services)
(Date of Written Examination:29.06.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION

TNPSC DEPARTMENTAL EXAM 2015 TIME TABLE RELEASED

CLICK HERE TO VIEW

December 11, 2014

சுகாதார அலுவலர் பதவி: காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சுகாதார அலுவலர் பதவியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியிலுள்ள சுகாதார அலுவலர் (ஏங்ஹப்ற்ட் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) பதவியில் 33 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு B.S.Sc., (Bachelor of Sanitary Science) அல்லது Diploma in Public Health அல்லது Licentiate in Public Health அல்லது M.B.B.S அல்லது DMS அல்லது LMP கல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.net என்ற ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி சென்னை மையத்தில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 9. மேலும் வயது வரம்பு, கல்வித் தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள், எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு திட்டம், தேர்வு மையம், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

November 30, 2014

TNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்

குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு பொது பணியிலு ள்ள குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவியில் 117 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இப்பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஊட்டச்சத்து அல்லது மனையியல் பாடப்பிரிவில் இளங்க லைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டத்துடன் கூடிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஊரக பணியில் முதுகலை பட்டயப்படிப்பு  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக, www.tnpsc.gov.in என்ற முகவரியில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க  வேண்டும். பதவிக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 15ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடைபெறும். முற்பகல் மற் றும் பிற்பகல் என இத்தேர்வு நடக்கும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 26ம் தேதி. மற்ற விவரங்களை தேர்வாணையத் தின்  www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

November 17, 2014

4,963 காலிப் பணியிடங்களுக்கு 13.38 லட்சம் பேர் போட்டி!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பி எஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.

சிலர் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை சற்று குறையக் கூடும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித் திருந்தனர்.

டிசம்பர் 21-ம் தேதி தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற் காக டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி கடந்த 12-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. குரூப்-4 தேர்வு எழுத குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற காரணத்தினாலும், நேர்முகத் தேர்வு இல்லாததால் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பதாலும் எப்போதுமே இத்தேர்வுக்கு கடுமையான போட்டியிருக்கும்.எஸ்எஸ்எல்சி முடித்தவர்க ளைக் காட்டிலும், பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, பிஇ, பிஎல் உள்ளிட்ட தொழில்கல்வி படித்தவர் களும் குரூப்-4 தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப் பிப்பது வழக்கம். கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் முதலிடத் தைப் பிடித்தவர் ஒரு பொறியி யல் பட்டதாரி என்பது குறிப்பிடத் தக்கது.மொத்தம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 மாணவர்கள் போட்டி போடுகிறார் கள். தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்வர் கள் முழு மூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

மாணவ-மாணவிகள் அதற்கான தயாரிப்பில் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளனர். தனியார் பயிற்சி மையங்களில் குரூப்-4 தேர்வுக்கான வகுப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.தேர்வுக்கு இன்னும் 5 வாரங்களே இருப்பதால் சில மையங்களில் அதிவிரைவு பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வகுப்புகள், மாதிரி தேர்வுகள், நண்பர்களுடன் குழுவிவாதம் என தேர்வர்கள் முழு மூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தற்போதைய போட்டிநிலை, அரசு பணித் தேர்வுகள் குறித்து அதிகரித்திருக்கும் விழிப்புணர்வு, பயிற்சி மையங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கட் ஆப் மார்க் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

November 09, 2014

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

      தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

              தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குருப் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. 1064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11497 பேர் 2 கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலை வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார். தேர்வாணைய தேர்வு கட்டு பாட்டு அலுவலர் வி.ஷோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

November 05, 2014

TNPSC : GROUP - II EXAMINATION HALL- TICKET PUBLISHED

வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட, பல பதவிகளில், 1,064 பணியிடங்களை (குரூப் - 2) நிரப்ப, கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலை தேர்வு நடந்தது.
இதில், தகுதி பெற்றவர்கள், வரும், 8ம் தேதி நடக்கும் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று காலை, கம்ப்யூட்டர் வழியில், பொது அறிவு தாள் தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளிக்கும் வகையிலான தேர்வும் நடக்கிறது.
இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மை தேர்வுக்கான 100 ரூபாய் கட்டணத்தை, இதுவரை செலுத்தாத தேர்வர்கள், 'செயலர், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, டி.டி., எடுத்து, நேரடியாக, தேர்வு அறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கேட்டுக் கொண்டு உள்ளார்.

October 21, 2014

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில் நடைபெறும்.
கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருவோர், தேவையான ஆவணங்களை கட்டாயம் எடுத்துவர வேண்டும். மேலும், தமிழ் வழியில் பயின்ற சலுகையைப் பெற, அதற்கான சான்றுகளைப் பெற்றுவர வேண்டும். இதில் கலந்துகொள்ள தவறுவோருக்கு, கட்டாயம் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இதுகுறித்த அனைத்து விபரங்களும் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

October 14, 2014

TNPSC: Group IV Services : Notification Published.


Current Notification
Advt. No./ 
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status






18/2014
Group IV Services
14.10.2014
12.11.2014
21.12.2014
Apply OnlineApply Online
Application EditApplication Edit
Challan ReprintChallan Reprint
Application ReprintApplication Reprint

October 12, 2014

TNPSC: Group 4 - 4வது கட்ட கலந்தாய்வு!

          இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடத்தப்பட்டது. இதில், இளநிலை உதவியாளர் பணிக்கான 4-வது கட்ட கலந்தாய்வு, தட்டச்சர் பணிக்கான 3-வது கட்ட கலந்தாய்வு, சுருக்கெழுத்தர் பணிக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகியவை அக்டோபர் 29-ம் தேதி தொடங்குகிறது.

        இதேபோல், கடந்த 20.2.2011 அன்று நடத்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) தேர்வின் 3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 27, 28, 29-ம் தேதிகளில் நடை பெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.