scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
July 05, 2016
விவசாய கடன் தள்ளுபடி.. அரசாரணை வெளியீடு.
கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்து தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கூட்டுறவுத்துறை செயலாளர் இன்று அரசாணையை வெளியிட்டார்.
கூட்டுறவு சங்கங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான அசல், வட்டி, அபராத தொகை என அனைத்துமே தள்ளுபடியாக உள்ளது. கடந்த மார்ச் 16ம் தேதிக்கு முன்புவரை பெற்ற கடன்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி உத்தரவு பொருந்தும்.
தமிழக முதல்வராக, மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். இதை செயல்படுத்தும் வகையில்தான் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட உள்ள மொத்த கடன் மதிப்பு ரூ.5750 கோடி என்று கூறப்படுகிறது. யார் யாரெல்லாம் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்ற வழிகாட்டு நெறிமுறையும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்தான் இந்த அறிவிப்பால் பலனடைவார்கள் என்பதால், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தனபால் உள்ளிட்டோர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
மழை பொய்த்துப்போனது உள்ளிட்ட இயற்கை பாதிப்பு எல்லா விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பையே ஏற்படுத்தும். அப்படியிருக்கும்போது, 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது சரியில்லை என்பது இவர்கள் கருத்து. அதேநேரம், சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த உத்தரவு நலன் தரும் என்று அவர்கள் வரவேற்றுள்ளனர்.
July 03, 2016
ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?
தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. சொந்த ஊர் : தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய விதிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமான விதிகளில், பல மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல ஆசிரியர்கள், தங்கள் சொந்த ஊர் கொண்ட மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் முகாமிட்டு, 'ஓபி' அடிக்கும் நிலையை மாற்றலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, கட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு : அதேபோல், பொதுத் தேர்வு தேர்ச்சி மற்றும் கற்றல் அடைவு தேர்வுகளில், பின் தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரியில்,ஆசிரியர்கள் பணியிடம் காலி ஏற்படாதவாறு, முழுவதும் நிரப்பும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர் எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆசிரியர்கள் கொண்ட, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியர்களுக்கு, வட மாவட்டங்களில் பணிமாற்றம் வழங்குவது குறித்தும் விதிகளில், குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. மேலும், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன் எந்த விதமான, மறைமுக இடமாறுதலும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி முடியும் போது, கவுன்சிலிங்கை துவங்கலாம் என்றும் பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
July 02, 2016
ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம் - புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு அறிவிப்பு
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்
அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி, மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்
தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்படும்
ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ள பெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்
ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
3 பாடத்துக்கு ஒரே 'சிலபஸ்' : ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டு, பல புகார்கள் எழுகின்றன. எனவே, தேசிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஒரே தேர்வு நடத்தலாமா என, ஆலோசிக்கப்படுகிறது.
கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் ஒவ்வொரு விதமாக படிப்பதால், அவற்றுக்கு தேசிய அளவில், ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்கள், மாநிலங்களின் விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்பு முதல் கட்டாயம் ஆக்கப்படும்.
June 29, 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.
ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.
7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
June 26, 2016
ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்
பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. பணி நியமன முழு விபரம்.
3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.
4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.
5. GPF/TPF/CPS எண் விபரம்
6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்
7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification)
8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம்
9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.
10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்)
11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.
12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்
13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்
14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்
15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்
16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.
17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.
18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.
19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.
20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.
21. பொது மாறுதல்களில் வந்த விபரம். (தொடரும்)
June 16, 2015
செல்வ மகள்’ திட்ட சேமிப்புக்கு வருமான வரிச் சலுகை
‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்துக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பவர்கள் பெறலாம். கடந்த ஆண்டு வருமான வரிக் கணக்கில் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள தொகையை சேர்க்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் இச்சலுகையை பெற உரிமை கோரலாம்'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது .
May 21, 2015
பத்தாம் வகுப்பில் சாதனை: அரசு பள்ளி மாணவர்கள் மூவர் உட்பட 41 பேர் மாநில அளவில் முதலிடம்
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் பெற்றுள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி சாதனை: முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பிறமொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 500 பெற்று 5 மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.9% மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%. இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம்: 90.5% | மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 95.4% ஆகும். வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாகவுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக இருந்தது. பாடவாரியாக முழு மதிப்பெண்: கணிதப் பாடத்தில் 27,134 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 1,15,853 பேர் 100-க்கு 100 பெற்றனர். சமூக அறிவியலில் 51,629 பேர் 100-க்கு 100 பேர் பெற்றுள்ளனர். முதல் வகுப்பில் தேர்ச்சி: பத்து லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 7,96,466 ஆகும். அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டார். எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in / www.dge.tn.nic.in www.dge1.tn.nic.in / www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. மே 22 முதல் 27-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தாள்கள் (மொழிப்பாடம், ஆங்கிலம்) கொண்ட பாடத்துக்கு கட்டணம் ரூ.305, ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத் தித்தான் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர் களும் தேவைப்பட்டால் ஜூன் 4 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
May 20, 2015
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி
பத்தாம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு மே22முதல் விண்ணப்பிக்கலாம்
பள்ளி திறக்கும் முன் குப்பைகளை அகற்ற வேண்டும்
May 10, 2015
பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், அரசுப் பள்ளிகள் தான் காரணம் என்பது தெரியவந்தது. குறிப்பாக வணிகவியல் பாடத்தில் 92.92 சதவீதம், பொருளியல் பாடத்தில் 97.71, வரலாறு பாடத்தில் 94 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மூன்று பாடங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்திருப்பது தெரியவந்ததுஇதையடுத்து, தேர்ச்சி சதவீதம் குறைந்த அதாவது 80-க்கும் குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்ததாவது:வணிகவியல், பொருளியல், வரலாறு ஆகிய 3 பாடங்களில் தான் அதிகளவில் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் மாநில அளவில் முதலிடம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தோல்வி அடைந்துள்ள மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படும். 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.
எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு
பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 கட்–ஆப் மதிப்பெண் 132 மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 200–க்கு 200 மதிப்பெண் 5 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 199.75 கட்–ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி 199 வரை கட்–ஆப் மதிப்பெண் போட்டி குறைவாக இருக்கும். 200–க்கு 199–க்கு கீழே 198.75 முதல் 197.75 வரை வழக்கமான கட்–ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்படும். இந்த ஆண்டு 197.5 கட்–ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போன 1266 மாணவர்கள் இந்த வருடம் சேர முயற்சி செய்கின்றனர். மருத்துவ கட்–ஆப் மார்க் குறைவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் என்ஜினீயரிங், பல் மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை தேர்வு செய்து ஒரு ஆண்டு படித்து வந்த போதிலும் ஒரு மார்க் 0.5 கட்–ஆப்பில் அரசு மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தற்போது பிளஸ்–2 முடித்துள்ள மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 197.50 கட்–ஆப் மார்க் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைந்துள்ளது. 400 பழைய மாணவர்கள் இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் படிப்பை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 9710 மாணவர்கள் கணிதத்தில் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 198 மதிப்பெண் 15 ஆயிரம் மாணவர்கள் எடுத்துள்ளனர். பொறியியல் படிப்புக்கு உரிய இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்ணை, பிரதான கணிதப் பாடத்தில் மாணவர்கள் எடுத்துள்ள அதிக மார்க் சமன் செய்து விட்டது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ, கட்–ஆப் 200–க்கு 0.25 மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பு: மே 14ம் தேதி முதல் விண்ணப்பம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு, வரும், 14ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், '2015 - 16ம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மே, 14 முதல் ஜூன், 4ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன், 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. வேண்டுகோள் கடிதம்: எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக் காசோலை ஆகியவற்றை அளிப்பது அவசியமாகும். இணையதளம் வாயிலாக: சுகாதாரத் துறையின் இணையதளம்www.tnhealth.orgமூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விநியோகம் தொடங்கும் திங்கள்கிழமையன்று (மே 11) பகல் 12 மணிமுதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்- மாற்றுத் திறனாளிகள்- முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் ஏற்கெனவே சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மே 28-ஆம் தேதி வரை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர, வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். தரவரிசைப் பட்டியல் எப்போது? கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பி.இ. கலந்தாய்வுக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.