scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label JUDGEMENTS. Show all posts
Showing posts with label JUDGEMENTS. Show all posts

November 21, 2014

டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்:தமிழக அரசு உத்தரவு

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை என, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.கடந்த, 2012ல், சிறப்பாசிரியர் பிரிவில், உடற்கல்வி ஆசிரியர்கள், 1,028 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாநில அளவில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டது.

இதை எதிர்த்து, முத்துவேலன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை முடிவில், சிறப்பாசிரியர் பணிக்கு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தமிழகத்தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, முழு தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.மேலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு அமைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, புதிய விதிகளை உருவாக்க, டி.ஆர்.பி.,யிடம், தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இதன் படி, டி.ஆர்.பி., அளித்த புதிய விதிமுறைகளை, பரிசீலித்த, தமிழக அரசு, அவற்றை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.இதன்படி, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அல்லாமல், டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும், தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர்.வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

மொத்தம், 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும்.'அப்ஜக்டிவ்' அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என, 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என, அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும்.தேர்விற்கு, 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

5 மதிப்பெண்கள் எப்படி?
எண்  தகுதி மதிப்பெண்
1. கூடுதல் கல்வித்தகுதி 0.5
2. முன்தகுதி (அரசு அல்லாதது) 0.5
3. அரசுப் பணி தகுதி 1
4. என்.சி.சி.,உட்பட கூடுதல் தகுதி 1.5
5 தோற்றப் பொலிவு  1.5
மொத்தம்  5

September 24, 2014

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள
வழக்கு எண். W.P.NO.28785/2012.உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம்மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதி. உஷா பரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

April 30, 2014

ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி தேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60 சதவீதம்பெற வேண்டும். மீதி, 40 சதவீதம், கல்வித் தகுதிக்காக என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண்; ஆசிரியர் பட்டய படிப்புக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15, என, 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிரச்னையில்லை. அதற்கான, 'கிரேடு' முறைக்கு தான், தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பிளஸ் 2 தேர்வுக்கு, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால், 15; மதிப்பெண், 80ல் இருந்து, 90 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12; மதிப்பெண், 70ல் இருந்து, 80 சதவீதம் வரை, 9; மதிப்பெண், 60ல் இருந்து, 70 சதவீதம் வரை, 6; மதிப்பெண், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை, மூன்று மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தகுதி தேர்விலும், 'கிரேடு' முறை கொண்டு வரப்பட்டது.

January 27, 2014

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்
செய்தார். அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

January 10, 2014

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு தீர்ப்பின் முக்கிய பகுதிகள்

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு குறித்து வணிகவியல் முதுகலை பட்டதாரிகள் பூங்கோதை, மாரியம்மாள் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில்
நீதியரசர் நாகமுத்து முதுகலை பட்டத்தையும் பி.எட் பட்டத்தையும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது எனவும் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் வழி அவசியமில்லை என தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் முக்கிய பகுதிகள் உங்களுக்காக......

December 13, 2013

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு

இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.மேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVIT க்கு
தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா ' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2 க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு  பிறபித்தார்.

இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.

December 09, 2013

இடைநிலை ஆசிரியர்களுக்கு 11.12.13 நல்ல சேதி சொல்லுமா?

 
 தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 ஊதியம் வழங்கக் கோரிய நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு 11.12.13 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இடைநிலை ஆசிரியருக்கு  ஊதியம் 9300+4200 
வழங்க மறுப்பது 
சட்ட விரோதம் .உடனே வழங்க வேண்டும் .
TATA   இடைநிலை ஆசிரியர் உரிமைக்காக
 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .33399/2013.
வழக்கறிஞர்  திரு . அஜ்மல்கான் .அவர்கள் .
 வழக்கின் தீர்ப்பு  11-12-13