நங்கை மூலிகை:
சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால்,
கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத்
தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும்
கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை
இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர்.
‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி.
பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.