தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேரும்போது முகப்பு (இண்டக்ஸ்) எண் வழங்கப்படும்.தமிழ்நாடு தரவு மையத்தின் (டேட்டா செண்டர்) இணையதளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணை ஊழியர்கள் பெற்றுள்ளார்களா என்பதை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். உறுதி செய்யப்பட்டதை, கணக்குத் துறை மற்றும் கருவூல அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும்.முகப்பு எண் வழங்கப்படாமல் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் முகப்பு எண் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு விண்ணப்பிப்பதற்கான பிப்ரவரி மாதம் வரையில் காலக்கெடு தற்போது நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.முகப்பு எண் பெறாத மற்றும் அதற்கு விண்ணப்பிக்காதவர்களின் சம்பள பட்டியல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, பிப்ரவரிக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
December 11, 2014
November 25, 2014
November 20, 2014
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு
தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.
இந்தத் தொகையானது மத்திய அரசின், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆணையம் அந்த நிதியை பங்குச்சந்தை உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யும். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஓய்வுபெறும்போது இந்த சேமிப்பு நிதியிலிருந்து 40 சதவீதம் உடனடி ஓய்வூதியமாக வழங்கப்படும். எஞ்சிய 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.இது இல்லாமல், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 20 சதவீத தொகையானது உடனடியாக வழங்கப்படும். எஞ்சிய 80 சதவீதம் அந்த ஊழியரின் 58 வயது பூர்த்திக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை அனைத்தும் திட்டம் சார்ந்த அரசின் அறிவிப்புகள். இந்தத் திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதுதான் திகைக்க வைக்கும் செய்தி.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் பேசிய அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், “திருத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் சொல்லப்பட்ட விதிகள் எதையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. இந்தத் திட்டத்தில் தேசிய அளவில் சுமார் 39 லட்சத்து 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக் கிறார்கள். இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பிடித் தம் செய்யப்பட்டு ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 2000 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.
2006-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் இருந்து ரெகுலர் பணியில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் யாருக்கும் இதுவரை ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியனிடம் கேட்டபோது, “தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களையும் இதுவரை வழங்காமல் வைத்திருக்கிறது. இதனால் பணிக் காலத்தில் இறந்துபோன ஆசிரியர்கள், போலீஸார், அரசு ஊழியர்கள் என சுமார் 440 பேரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி மேலாளரை தமிழக அரசு உடனடியாக அறிவித்திருக்க வேண்டும். அந்த நிதி மேலாளர்தான் ஓய்வூதிய நிதியை உரிய இடத்தில் முதலீடு செய்யமுடியும். அப்படி நியமிக்காததால் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பணத்தை அரசு டேட்டா சென்டரிலேயே வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு சட்டம் போட்டார்களே தவிர அதை முறையாக நடைமுறைப்படுத்த வில்லை’’ என்றார்.
November 10, 2014
November 08, 2014
October 30, 2014
GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14.
P.F RATE OF INTEREST:
>1994 to 2000=12%
>2000-01=11%
>2001-02=9.50%
>2002-03=9%
>2003 to 2012= 8%
>2012-13=8.80%
>2013-14=8.70%
October 14, 2014
August 01, 2014
May 29, 2014
புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்-தினகரன் நாளிதழ்.
தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம்
செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 25, 2014
அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு
இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி (எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், சென்னை கிண்டியில் உள்ள தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ("டேட்டா சென்டர்') ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்த திட்டப் பணிகள் அனைத்தையும் தகவல் தொகுப்பு மையமே இனி மேற்கொள்ளும்.
எனவே, அரசு ஊழியர்கள் இனி தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் பெற, ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், கிண்டி என்ற முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.