அனைவருக்கும் மனப்பாடமாக பத்தாவது வாய்ப்பாடு வரை சொல்லத் தெரியும். ஆனால்
வாய்ப்பாடு மறந்து விட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். நான்
சொல்லித் தரப்போகிற இந்த உத்தி உங்கள் வாய்ப்பாடு மனப்பாடப் பிரச்சனையை
தீர்த்து வைக்கும்.
ஓரிலக்க எண்கள் அனைத்தும் பத்துக்கு கீழே உள்ள எண்கள். எவ்வளவு கீழே அல்லது அருகில் உள்ளன என்பதை வைத்துதான் நாம் இந்தக் கணக்குகளை போடப் போகிறோம்.
டீன் ஏஜ் என்பது ஒரு பரவசமான பருவம். எல்லா பெருசுகளையும் இன்னொரு முறை
வராதா என்று ஏங்க வைக்கிற பருவம். 13க்கு மேல் 20க்கு கீழ் உள்ள எல்லா
எண்களையும் டீன் எண்கள் என்பார்கள். Thirteen, Fourteen, Fifteen, Sixteen,
Seventeen, Eighteen, Nineteen என எல்லா எண்களும் teen என முடிவதால் இந்த
செல்லப் பெயர். இந்த செல்ல எண்களை ஒன்றுடன் ஒன்று எளிதாகப் பெருக்க ஒரு தனி
உத்தியை பயன்படுத்தலாம். நம்முடைய கணக்கில் 12ஐயும் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
"உன் கையில 10 சாக்லேட் இருக்கு. 5 நான் எடுத்துக்கறேன். மீதி எத்தனை இருக்கும்?" "மீதி எதுவும் இருக்காது சார்?" "ஏன்?" "ஏன்னா மீதியை நான் சாப்பிட்டுவிடுவேனே?"
கழித்தல்
கணக்கு பற்றிய நிரந்தரமான, ஜாலியான ஜோக் இது. இப்போ நான் சொல்லித்
தரப்போற உத்தி இந்த ஜோக்கை விட ஜாலியானது. எளிதானது.
எல்லாமே
ஒன்பதிலிருந்து. கடைசி மட்டும் 10லிருந்து. இந்த மின்னல் மந்திரத்தை
ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் கண் மூடித் திறப்பதற்குள் பின்வரும் கழித்தல்
கணக்குகளை போட்டுவிடலாம்.
எந்த இரு இலக்க எண்ணையும் இன்னொரு இரு இலக்க எண்ணால் 6 வினாடிகளுக்குள்
பெருக்க முடியும். தொடர்ந்து முயற்சி செய்தால் மூன்று வினாடிகளில்
போட்டுவிட முடியும். என்னுடைய வகுப்புகளில் படிக்கும் சில மூன்றாம்கிளாஸ்
வாண்டுகள் 6 வினாடிகளில் அசத்துகிறார்கள். எப்படி என்று பரபரக்கிறதா?
அடுத்த வரியிலிருந்து ஆரம்பிக்கிறது நம்ம மின்னல் பெருக்கல்.
எப்படி என சொல்வதற்கு முன்னால், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த
அஞ்சுகத்திற்கு வாழ்த்துக்கள். அஞ்சுகம் ஒன்பதாம் வகுப்பு மாணவி. நமது
மின்னல் கணிதத்தை பயன்படுத்தி கீழ்காணும் கணக்குகளை செய்து
அனுப்பியிருந்தார்.
இதுவரையில் 90முதல் 100 வரையிலான எண்களை மட்டும் எப்படி மின்னல் வேகத்தில்
பெருக்குவது எனப் பார்த்தோம். இது ரொம்ப ஈஸியா இருக்கு சார். இதே முறையை
மற்ற எண்களுக்கும் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். இதற்கு ஏதாவது
உத்தி இருக்கிறதா என்று சென்னை அரும்பாக்கத்திலிருந்து ஒருவர் மின்னஞ்சல்
அனுப்பியிருந்தார். அவருக்கு மின்னஞ்சலில் கூறியிருந்த பதிலை அப்படியே
இங்கு தருகிறேன்.
50 என்பது 100/2
இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான்.
அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ,
அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை
பார்க்கலாமா?