200க்கு அருகில் உள்ள எண்கள்களை பெருக்கும்போது மனதில் இருக்க வேண்டியவை
- அடிப்படை எண் 100
- 200 = 100 x 2
- கொடுக்கப்பட்டிருக்கும் எண்களுக்கும் 200க்கும் வித்தியாசம் எத்தனை?
ஒரு உதாரணமாக 206 x 203 என்ன என்று பார்ப்போம்.
ஒரே ஒரு படம் போதும். அது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். அதனாலேயே ஆரம்பத்தில் நான் எழுத்துக்களை விட படங்களை நிறைய நம்பினேன். போகப்போக நேரமின்மை மற்றும் அலுப்பு காரணமாக படங்கள் தவிர்த்து எழுத்தால் மட்டுமே விவரித்தேன். இது சிலரை குழப்பி விட்டது, அல்லது ஆர்வத்தை குறைத்துவிட்டது என்று கருதுகிறேன். எனவே மீண்டும் படம் போட ஆரம்பித்திருக்கிறேன். இனி குழப்பம் குறையும், கணக்கில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஸ்டெப் - 1
கொடுக்கப்பட்டிருக்கும் இரு எண்களில் இருந்தும் 200ஐ கழியுங்கள். இது படு எளிது. அதனால் விளக்கம் தேவை இல்லை.
ஸ்டெப் - 2
கழித்து வந்த இரு எண்களையும் பெருக்குங்கள்
206 - 200 = 6
203 - 200 = 3
6 x 3 = 18
இது விடையின் முதல் பகுதி
ஸ்டெப் - 3
குறுக்கு வாட்டில் கழித்து வந்த இரு எண்களையும் கூட்டுங்கள்.
206 + 3 = 209
203 + 6 = 209
இரண்டும் ஒரே விடைதான் (எப்போதுமே அப்படித்தான் வரும்)
ஸ்டெப் - 4
அடிப்படை எண் 100. இந்த எண்ணை வைத்து 209ஐ பெருக்க வேண்டும். இதுவும் எளிது.
209 x 100 = 20900
ஸ்டெப் - 5
தற்போது கிடைத்திருக்கும் 20900ஐ இரண்டால் பெருக்க வேண்டும்.
20900 x 2 = 41800
இது விடையின் இரண்டாவது பகுதி
ஸ்டெப் - 6
விடையின் முதல் பகுதி 18
விடையின் இரண்டாவது பகுதி 41800
இரண்டையும் கூட்ட வேண்டும்.
41800 + 18 = 41818
விடை : 206 x 203 = 41818
No comments:
Post a Comment