scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

July 04, 2016

் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்குமுன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல்எண்ணை பதிவு செய்ய வேண்டும்.அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும்தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச்சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்.

March 16, 2015

செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா / கணக்கு) திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா / கணக்கு) திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

v மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகம் மூலம் சிறப்பு சேமிப்பு திட்டத்தைஅறிமுகம் செய்துள்ளது.

v 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் /காப்பாளர் உதவியுடன்சுகன்யா சம்தி கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் துவங்கலாம். ( அறிமுக சலுகையாக 11 வயதுள்ள பெண்குழந்தைகள் இந்த வருடம் மட்டும் 02.12.2015 வரைசேர்த்துக்கொள்ளப்படுவார்கள் )

v ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம், ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டும்.***

v இதற்கு வாரிசு நியமனவசதி இல்லை.

v கணக்கு துவங்க முதல் தவணை குறைந்த பட்சம் ரூ 1000, மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ. 1,50,000/- ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம்

v இந்த கணக்கில் 100ன் மடங்காக எத்தனை முறை வேண்டுமானாலும், அனைத்து(CBS) அஞ்சலகங்களிலும் பணம் செலுத்தலாம்.

v 2014-2015 நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதம் 9.1 %

v கணக்கு துவங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் வரைபணம் செலுத்த வேண்டும்.

v மேலும், கணக்கு வைத்திருக்கும் பெண்குழந்தையின் 18 வயது முடிந்த பின், கடந்த நிதி ஆண்டு இறுதியில் உள்ள இருப்புத்தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை படிப்புக்காக பணம்எடுத்துக் கொள்ளலாம்.

v 21 ஆண்டுகள் முடிந்தபின் கணக்கை முடித்து முதிர்வு தொகையை பெற்றுகொள்ளலாம் அல்லது திருமணத்தின் போது கணக்கை முடித்துக்கொள்ளலாம்

v செலுத்தும் தொகைக்கு(அசல் & வட்டி) வருமானவரி விலக்கு உண்டு (80-C IT Act 1961 )

தேவையான விபரங்கள் :
பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் & புகைப்படம் பெற்றோர் / காப்பாளரின் இருப்பிட மற்றும் ஆளறி சான்றிதழ் நகல். ( Address & ID Proof )

முதிர்வு தொகை : செலுத்தும் தொகை : ரூ 1000 வீதம் 14 வருடங்கள் ( 1000 x 12 x 14 = 1,68,000 ) வட்டி = 439128 மொத்தம் = 6,07,128 ( தோராயமாக ) மேலும் விவரங்களுக்கு, இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள அருகில்உள்ள அனைத்து அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.

February 04, 2015

80C : வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு. 80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)

இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.
2. ஆயுள் காப்பீடு

இதிலேயும் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.
3. வீட்டுக்கடன் அசல்

நாம் வீட்டுக்கடன் வாங்குபோது மாதா மாதம் EMI கட்டவேண்டும். இதை இரண்டாக பிரிப்பார்கள் 1. அசல் 2. வட்டி. ஆரம்பத்தில் அசலை குறைவாக எடுப்பார்கள், வட்டி அதிகம் எடுக்கப்படும். ஒருவர் கட்டக்கூடிய அசலை இந்த வருமான வரி விலக்கில் காண்பிக்க முடியும்.
4. தேசிய சேமிப்புத் திட்டம் (NSC)

இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பாதுகாப்பு அதிகம் விரும்புவர்கள் இதில் முதலீடு செய்வார்கள். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். 8.7% தற்போதைய வட்டி. ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது. இந்த கணக்கை தபால் நிலையம் மற்றும் வங்கியில் தொடரலாம்.
6. தபால் நிலைய வைப்பு நிதி

இதற்கு ஒருவர் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும், அத்துடன் 8.5% வட்டி கிடைக்கும், இதிலும் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். இது ஒரே ஒரு தடவை செய்யக்கூடிய முதலீடு.
7. முதியோர் சேமிப்பு திட்டம் (SENIOR CITIZEN SAVINGS SCHEME)

இதில் முதலீடு செய்பவர்களுக்கு வயது குறைந்தது 60 வருடம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 55 வருடம். ஒவ்வொரு காலாண்டும் வட்டி கிடைக்கும், வருடத்திற்கு 9.2% இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். வருமான வரி விலக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குதான். இதில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து ஆண்டு வரை எடுக்க முடியாது.
8. 5 வருட வங்கி டிபாசிட்

பாதுகாப்பு கருதுபவர்கள் ஐந்து வருடம் இதில் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒரு லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.
9. கல்விக் கட்டணம் (TUITION FEES)

ஒருவர் தன் குழந்தைக்கு செலவிடும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகும் கல்வி பயிற்றுக் கட்டணத்தை (டியூஷன் பீஸ்) இந்த பிரிவில் எடுத்துகொள்ளலாம். இது வருடா வருடம் வேறுபட வாய்ப்புள்ளது. நாம் செலவிடும் கல்விக் கட்டணம் எல்லாவற்றையும் இதில் காண்பிக்கமுடியும்.
10. முத்திரைத் தாள் பதிவு கட்டணம்

ஒருவர் நிலம்,வீடு வாங்கும்போது, இந்த செலவுகள் இன்றியமையாதவை. அதற்கு ஆகக்கூடிய செலவுகளான ஸ்டாம்ப் டூட்டி, பதிவு கட்டணம் ஆகியவற்றை இந்த 80c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கில் (1 லட்சம் வரை) காண்பிக்கமுடியும்.
11. மியூச்சுவல் ஃபண்ட் (ELSS)

இதில் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம்(லாக் இன் காலம்) குறைவு. சாராம்சம் மேலே சொன்ன 11 வகையான திட்டத்தில் அந்த ஒரு லட்ச ரூபாயை ஒரே திட்டத்திலோ, பல திட்டத்திலோ சேர்ந்து சேமிக்கலாம். வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் இதை திட்டமிட்டு சேமித்தால், நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இதில் சில நாம் செய்யக்கூடிய செலவுகளை காண்பிக்கவும், சில பிரிவுகள் மேலும் நாம் சேமிக்கவும் உதவுகிறது. அவ்வாறு சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். இதை ஒரு தொல்லையாக கருதாமல் நமக்கு சேமிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து செயல்படுவது நல்லது. வேலைக்கு சேர்ந்தவுடன் பெரும்பாலோர் சொல்லும் சொல், எனக்கு வருமானம் போதவில்லை, அதுவே சில வருடங்களுக்கு பிறகு, என்னுடைய வருமானத்தில் பெரும் பங்கு வருமான வரியிலேயே போய் விடுகிறது என்கிறார்கள். இதைப்பற்றி நான் படித்த ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது, அது ஆங்கிலத்தில் சொல்வது எளிது, நான் தமிழிலும் முயற்சித்திருக்கிறேன்.

“A fine is a tax for doing wrong. A tax is a fine for doing well.”

நகைச்சுவையாக சொன்னால் "அபராதம் என்பது ஒருவர் செய்யும் தவறுக்கான வரி, அதே சமயம் வரி என்பது ஒருவர் நன்றாக செயல்பட்டால் அரசாங்கம் நமக்கு விதிக்கும் அபராதம்” எப்படி பணம் சம்பாதிப்பது நம்முடைய கடமை என்று நினைக்கிறோமோ அதே மாதிரி சம்பாதித்த பணத்தை சரியாக சேமிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இதற்கு சோம்பல்பட்டு தேவையற்றவைகளை முதலீடு செய்து அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்தவித பிரோயோஜனமும் இல்லை. சேமிப்போம், நன்கு பயன் பெறுவோம்.

January 27, 2015

e Payroll Online ECS User Manual

Present salary bill passing ECS system will be changed in to online Epayroll method. In this E pay roll method there will be given two passwords by Treasury. The first e-payroll password is to the clerk who prepared the salary bill. And the second password is given to the Pay Drawing Officer.
         On following this e-payroll method the salary bill will be submitted only in online. But the M.T.C (Madras Treasury Code Register) and Special Attachment Orders only will be straightly submitted to concerned Treasury by manual. Now this ecs epayroll system introduced to Rural Development Department. It will be implemented to the other departments like Education Departments soon.

January 02, 2015

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
Income Slabs Tax Rates

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.
iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000

Ø தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

Ø வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Ø சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Ø நிகர வருமானம் 5லட்சத்துக்குள் இருந்தால் (u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 150000 (ஒருலட்சம்)கழித்தபின்பு வரும் தொகை ) u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி இந்த ஆண்டும் தொடர்கிறது.

Ø மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் மருத்துவ காப்பீடு சந்தா தொகை (150x8=1800) (u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 150000 கழித்தபின்பு நேரடியாக u/s 80 D மொத்தமாக கழிக்கலாம்.

Ø FEB -15 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.12280 எனில், FEB -15 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

Ø உதாரணம்:
கட்டப்படவேண்டிய தொகை = ரூ.12280 சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட வேண்டியத் தொகை 12180*0.97086 = ரூ.11825 3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 355 மொத்தம் = ரூ.12280

December 06, 2014

YOUTUBE AND FACEBOOK வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

அன்பார்ந்த நண்பர்களே நாம் இணையத்தில் உலாவரும் போது facebook மற்றும் youtube ல் சில அறிய வீடியோக்களை பார்ப்போம். அவற்றை தரவிறக்கம் செய்ய மென்பொருட்களை தேடியிருப்போம். எந்த மென்பொருளையும் நம் கணிப்பொறியில் பயன்படுத்தாமல் வீடியோவை எளிமையாக விரைவில் தரவிறக்கம் செய்ய கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றுங்கள்.
முதலில் FACEBOOK VIDEO

FACEBOOK VIDEO வை தரவிறக்கம் செய்ய முதலில் அந்த வீடியோவை PLAY செய்யுங்கள். PLAY செய்தபிறகு அதன் address bar ல் உள்ள address ல் www என் பதை எடுத்துவிட்டு ’m’ என்ற எழுத்தை அடித்து ENTER கிளிக் செய்யுங்கள்.
எடுத்துக்காட்டாக https://www.facebook.com/video.php?v=857544580932576&set=vb.806883945998640&type=2&theater என்ற வீடியாவை டவுன்லோட் செய்ய
https://m.facebook.com/video.php?v=857544580932576&set=vb.806883945998640&type=2&theater என்று ‘www’ க்கு பதிலாக ‘m’ ஐ டைப் செய்து enter key யை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஒரு புதிய பக்கத்தில் அந்த வீடியோ தோன்றும் அதை PLAY செய்துவிட்டு mouse -ஐ வீடியோவின் மீது right click செய்து save video as என்பதை கிளிக் செய்து வீடியோவை சேமித்து மகிழுங்கள். அடுத்து YOUTUBE வீடியோ தரவிறக்கம். YOUTUBE வீடியோ தரவிறக்கம் செய்ய முதலில் அந்த வீடியோவை PLAY செய்யுங்கள். PLAY செய்தபிறகு அதன் address bar ல் உள்ள address ல் www. க்கு பக்கத்தில் ss என்பதை டைப் செய்து ENTER கிளிக் செய்யுங்கள். எடுத்துக்காட்டாக https://www.youtube.com/watch?v=lVjeA693dlo என்ற வீடியாவை டவுன்லோட் செய்ய https://www.ssyoutube.com/watch?v=lVjeA693dlo என்று ‘ss’ ஐ டைப் செய்து enter key யை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது உங்களுக்கு http://en.savefrom.net/ என்ற புதிய பக்கத்தில் அந்த வீடியோ தோன்றும் அந்த பக்கத்தில் FLV , MP4 போன்ற Download Links கிடைக்கும் உங்களுக்கு வேண்டிய format ல் download செய்து மகிழுங்கள்.

December 05, 2014

பொருள் வாங்காத குடும்ப அட்டை: இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்

எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், தங்களது அட்டையை இணைய தளம் மூலம் புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

www.consumer.tn.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் துறை- நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்துக்குச் சென்று அதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள

குடும்ப அட்டை ("என் கார்டு') புதுப்பித்தல் அறிவிப்பை "கிளிக்' செய்து 2015-ஆம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை உள்தாள் ஒட்டி புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எந்தப் பொருளும் வேண்டாதவர்களும் தங்களது குடும்ப அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அட்டையை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர்.

அவர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்த பிறகு, கிடைக்கும் பதிவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அட்டையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Click Here - Renewal of "N" Family Card for the Year - 2015

December 03, 2014

சமையல் காஸ் சிலிண்டருக்கு புதிய வெப்சைட்......

நுகர்வோரின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை
மானியத்திற்கும் விண்ணப்பிக்கலாம் 
திருப்தி இல்லாத ஏஜென்சியை மாற்றும் வசதி.
CLICK HERE TO GO TO WEBSITE 

November 20, 2014

பணவிடை பட்டுவாடா செய்யும்போது தபால் ஊழியர்கள் ‘அன்பளிப்பு’ கேட்டால் புகார் தெரிவிக்கலாம் சென்னை அஞ்சல் துறை தலைவர் அறிவிப்பு

பணவிடை பட்டுவாடா செய்யும்போது தபால் ஊழியர்கள் ‘அன்பளிப்பு’ கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.

அன்பளிப்பு வேண்டாம்
சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சலக சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவி தொகை பணவிடை வழங்கப்படும்போது, ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ தயவு செய்து தபால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

November 06, 2014

ஒரு நாளில் மரித்துவிடுமா ஈசல் - தி இந்து

ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

August 28, 2014

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?

கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?

அரசு விதிகளின்படி, தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், அருந்ததியர் அல்லது பழங்குடியினராக இருந்தால் மட்டுமே அது கலப்புத் திருமணம். பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட ஒரே பட்டியலுக்குள் வரும் சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அது கலப்புத் திருமணம் ஆகாது. மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டியசான்றுகள் என்ன?

கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற என்ன சான்று வழங்க வேண்டும்?

முன்னாள் படைவீரர் வாரிசு சான்றிதழ் 2 நகல், குடும்ப அட்டை சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நகல்களில் சான்றொப்பம் தேவை.

மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற பதிவு செய்ய வேண்டிய சான்றுஎன்ன?

குடும்ப அட்டை நகல், மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு விண்ணப்பம் செய்யும்மனு ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி என்பதற்கான தேசிய அடையாள அட்டையில் சான்றொப்பம் தேவை.

வேறு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது வேலைவாய்ப்பு பதிவை மாற்ற முடியுமா?

வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட குடிப்பெயர்ச்சி சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.