scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 28, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி - Dinakaran News

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

யூரியாவுக்கான உற்பத்தி விலையை டன்னுக்கு 350 ரூபாய் அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது.

No comments:

Post a Comment