ஒவ்வொரு குழந்தைக்கும் எழுத, வாசிக்கப் பழகுவது முக்கியமான ஒரு கட்டமாகும்.
எழுதுவது, வாசிப்பது போன்றவை பேசுவது போல் இயற்கையாக வருவதில்லை. நாம்
சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த வயதில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற
ஐயம் எல்லோர் மனதிலும் உண்டு. சிறு வயதிலே எழுதப் பழக்குகிறார்கள் என்ற
காரணத்தால் சிலர் சில பள்ளிகளை நிராகரித்திருக்கிறார்கள்.
சிறு வயதில் எழுதப் பழக்குவது தவறா? குழந்தை விருப்பமில்லாமல் இருந்தால் தவறு. விருப்பமில்லாத குழந்தைகளை வற்புறுத்துவதால் அவர்கள்களுக்கு எழுதுவதன் மேல் ஒரு வெறுப்பு வந்து விடும். எழுதுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு கை, கண், விரல், மூளை அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். மூளையில் பதிந்துள்ள எழுத்துக்களின் வடிவங்களை விரல்கள் ஒரு இடத்தில் எழுத கையும், கண்ணும் உதவ வேண்டும்.
எப்பொழுது எழுதப் பழக்கலாம்? அது குழந்தைக்கு குழந்தைக்கு மாறுபடும். ஒரு குழந்தை சீக்கிரமாக எழுதுவதால் அறிவாளி என்றோ, எழுதாததால் மக்கு (சாரி, வேறு வார்த்தை தெரியவில்லை) என்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தையின் வளரும் சூழலுக்கு ஏற்ப அதன் எழுதத் தொடங்கும் வயது மாறுபடும். பெற்றோர்கள் அதிகம் புத்திகங்கள் வாசித்தாலோ, எழுதினாலோ குழந்தைகளும் எழுத விருப்பப்படுவார்கள். சிறு வயதிலிருந்தே (பிறந்ததிலிருந்தே) புத்தகங்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டினால், அவர்கள் வேகமாக எழுதப் பழகுவார்கள்.
எழுதப் பழக்குவதற்கு முன்
1. எழுத்துக்களைக் கண்டுபிடிக்கப் (identify letters) பழக்குங்கள்.
2. பேப்பர், பேனா, மார்க்கர், crayons போன்றவற்றை எப்பொழுதும் குழந்தைக்கு எடுக்க வசதியாக இருக்கும் இடத்தில் வைத்திருங்கள். கிறுக்கவும், வரையவும் பழக்குங்கள்.
3. குழந்தைகளுக்கு பலவித வடிவங்கள் வரைய கற்றுக் கொடுங்கள். புள்ளி புள்ளியாக வடிவங்கள் வரைந்து புள்ளிகளை இணைக்கச் சொல்லுங்கள்.
4. பெயரை எழுதப் பழக்குங்கள். கடிதம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பொழுது அவர்கள் பெயரை அவர்களே எழுத சொல்லுங்கள்.
ஹார்ட்வேர்ட் கடைகளில் கிடைக்கும் சாண்ட் பேப்பர்களில்
எழுத்துக்களை எழுதி அந்த வடிவத்திற்கு கட் செய்து
அதை ஒரு கெட்டியான அட்டையில் ஒட்டி
வைத்துக்கொள்ள வேண்டும்.
படத்தில் குழந்தை செய்வது போல் விரல் நுனியால்
அந்த எழுத்துக்களின் மேல் எழுதுவது போல்
ட்ரேஸ் செய்யவேண்டும். ட்ரேஸ் செய்துமுடித்ததும்
அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும்.
மரத்தினால் அல்லது பிளாஸ்டிக்கில் எழுத்துருவங்கள்
கிடைக்கும் அதை MOVABLE ALPHABET என்போம்.
அதைக் கையில் எடுத்து பார்த்து குழந்தை
உணர வைக்க வேண்டும்.
முதலில் vowels எனப்படும் A E I O U எழுத்துக்களை
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பிறகே consonants.
எழுத்தின் வடிவம், உச்சரிப்பு ஆகியவை
மனதில் நன்கு பதிந்த பின்னரே எழுதப் பழக்க வேண்டும்.
sand paper letters, movable alphabets ஆகியவற்றைக்
கொண்டு 2 எழுத்து வார்த்தைகள், 3 எழுத்து
வார்த்தைகள் ஆகியவை செய்ய கற்றுக் கொடுக்க
வேண்டும்.
picture + letters (a for apple, b for ball போல)
செய்து மனதில் பதிய வைக்கலாம்.
இதன் பிறகுதான் எழுத்துப் பயிற்சி. அப்பொழுதும்
தான் கற்ற எழுத்துக்களை உடனடியாக
எழுதச் சொல்லக்கூடாது.
patterns எனப்படும் வடிவங்களை கற்றுக்
கொடுத்தால் எப்படி எழுத வேண்டும் என
குழந்தை புரிந்துக்கொள்ளும்.
கீழே கொடுத்திருக்கும் patterns புள்ளி புள்ளியாக
வைத்து BROAD LINE NOTE BOOK எனப்படும்
பெரிய 4 வரி நோட்டில் எழுதிக்கொடுத்து
கலர் பென்சிலால் புள்ளிகளை இணைக்கச்
சொல்ல வேண்டும்.
இவை எந்த மொழிக்கும் அடிப்படை பேட்டர்ன்கள்
ஆகும்.
இவைகளை எழுதப் பழக்கிய பிறகு(strokes களின்
பெயர்களை பிள்ளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்)
ஆல்ஃபபட்களை எழுத பழக்கலாம்.

No comments:
Post a Comment