மனக்கணக்கு
இப்போ பொதுவா எல்லா இடங்களிலும் நாம் பார்க்கும்விடயம் கால்குலேட்டர்களின் பயன்பாடு. சாதாரணமான
கணக்குகளுக்கு கூட கால்குலேட்டரின் உதவி நாடப்படுகிறது.
ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையில் அப்படித்தான்
இருந்ததா? இது நாம் சற்று யோசிக்க வேண்டிய விடயம்.
முன்பு பள்ளிகளில் கணித வகுப்பில் வாரத்துக்கு ஒரு நாள்
மனக்கணக்கு வகுப்பு இருக்கும்.
ஆசிரியை கணக்கை போர்டில் எழுதுவது,
அல்லது சொல்வது அதை கூர்ந்து கவனித்து கணக்கை
மனதில் செய்து விடையை மட்டும் நோட்டில் எழுதவேண்டும்.
இப்போது பள்ளியில் இந்த முறை செய்ல்பாட்டில் இருப்பதாகத்
தெரியவில்லை.
Mental calculation
பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியா.
வாய்ப்பாடு எங்கே எப்படி கேட்டாலும் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.
அப்போதுதான் கணக்கை சரியாக போட முடியும். வாய்ப்பாடு
பல குழந்தைகளுக்குத் தெரிவதில்லை.(இதில் என் பிள்ளைகளும்
அடக்கம். அவர்கள் முன்பு படித்த பள்ளியில் வாய்ப்பாடு கற்றுக்
கொடுக்கவில்லை. அவர்கள் வேறு முறையில் செய்தார்கள்.
இப்போது வாய்ப்பாடை அவர்களே சொல்ல ரெக்கார்ட் செய்து
கேசட் கொடுத்துவிட்டேன் அதைக் கேட்டு கேட்டு நல்ல முன்னேற்றம்)
பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்களோ இல்லையோ
வீட்டில் நாம் பழக்கலாம். மனக்கணக்கு போட ஓரிடத்தில்
உட்கார்ந்து செய்ய வேண்டுமென்பது இல்லை. நாம்
வேலை செய்துக்கொண்டே பிள்ளைகளுக்கு மனக்கணக்கு
கொடுக்கலாம்.
மனக்கணக்கு போடுவதால் பயனென்ன?
1. நம் பிள்ளைகள் கால்குலேட்டரை நம்பி வாழப்போவது இல்லை.
2. மனக்கணக்கு போடுவதனால் மூளைவேலை செய்கிறது.
3. மனக்கணக்கு BRAIN TEASER ஆக உபயோகமாகிறது.
4. புத்தகம், பேனா கொண்டு செய்யும் கணக்குகளுக்கு
இடையே இது பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சி தரும்.
5. பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள்.
புத்தக கடைகளில் மெண்டல் சம்ஸ் என்ற பெயரில்
பல புத்தகங்கள் கிடைக்கின்றன். பிள்ளைகளின்
வயதிற்கேற்ப அத்தைகய புத்தகங்களின் உதவியோடும்
கணக்கைச் செய்ய வைக்கலாம்.
கணக்கில் பலவித பயிற்சி கிடைக்க பிள்ளைகளுக்கு
ஏதுவாகிறது.
மனக்கணக்கு பயிற்சி செய்ய நாம் ஓர் இடத்தில்
உட்கார்ந்துதான் செய்ய வேண்டுமென்பதில்லை.
துணி மடிக்கும்பொழுது, சமையற்கட்டில்
வேலை செய்துகொண்டே கூட பிள்ளைகளுக்கு
மனக்கணக்கு கொடுக்கலாம்.
நம் பிள்ளைகளுக்கு மனக்கணக்கு கற்றுக்கொடுப்போம்
புத்திசாலிகளாக்குவோம்.
No comments:
Post a Comment