டீன் ஏஜ் என்பது ஒரு பரவசமான பருவம். எல்லா பெருசுகளையும் இன்னொரு முறை
வராதா என்று ஏங்க வைக்கிற பருவம். 13க்கு மேல் 20க்கு கீழ் உள்ள எல்லா
எண்களையும் டீன் எண்கள் என்பார்கள். Thirteen, Fourteen, Fifteen, Sixteen,
Seventeen, Eighteen, Nineteen என எல்லா எண்களும் teen என முடிவதால் இந்த
செல்லப் பெயர். இந்த செல்ல எண்களை ஒன்றுடன் ஒன்று எளிதாகப் பெருக்க ஒரு தனி
உத்தியை பயன்படுத்தலாம். நம்முடைய கணக்கில் 12ஐயும் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
முதல் உதாரணம் : 13 x 14
- 13 மற்றும் 14 இரு எண்களுமே எண் 10க்கு அருகில் உள்ளன.
- முதல் எண் 13. இது பத்தை விட எவ்வளவு அதிகம் 13 - 10 = +3 (பிளஸ் 3)
- அடுத்த எண் 14. இது பத்தை விட எவ்வளவு அதிகம் 14 - 10 = +4 (பிளஸ் 4)
- இனி விடைகளை பெருக்குங்கள். +4 x +3 = +12. (பிளஸ் 12).
- இப்போது பதின்மூன்றுடன் நான்கை கூட்டுங்கள் 13 + 4 = 17. அல்லது பதினான்குடன் மூன்றைக் கூட்டுங்கள் 14 + 3 = 17. இரண்டிற்கும் ஒரே விடைதான் 17.
- இனி 17ஐ பத்தால் பெருக்குங்கள். 17 x 10 = 170
- 170 + 12 = 182. இது தான் விடை.
இரண்டாவது உதாரணம் : 12 x 18
- 12 மற்றும் 18 இரு எண்களுமே எண் 10க்கு அருகில் உள்ளன.
- முதல் எண் 12. இது பத்தை விட எவ்வளவு அதிகம் 12 - 10 = +2 (பிளஸ் 2)
- அடுத்த எண் 14. இது பத்தை விட எவ்வளவு அதிகம் 18 - 10 = +8 (பிளஸ் 8)
- இனி விடைகளை பெருக்குங்கள். +2 x +8 = +16. (பிளஸ் 16).
- இப்போது பன்னிரண்டுடன் எட்டை கூட்டுங்கள் 12 + 8 = 20. அல்லது பதினெட்டுடன் இரண்டைக் கூட்டுங்கள் 18 + 2 = 20. இரண்டிற்கும் ஒரே விடைதான் 20.
- இனி 20ஐ பத்தால் பெருக்குங்கள். 20 x 10 = 200
- 200 + 16 = 216. இது தான் விடை.
12 x 14 12 x 16 14 x 14 15 x 15
12 x 18 13 x 14 14 x 12 15 x 14
No comments:
Post a Comment