'பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு
தேர்வில், விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி
வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப்
பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். இரு தாள் கொண்ட மொழிப்பாடங்களுக்கு,
பாடத்துக்கு தலா, 305; கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு,
பாடத்துக்கு தலா, 205 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்
பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை
அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு உடனடித் துணைத்
தேர்வுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும்,
தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment