குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு பொது பணியிலு ள்ள குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவியில் 117 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இப்பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஊட்டச்சத்து அல்லது மனையியல் பாடப்பிரிவில் இளங்க லைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டத்துடன் கூடிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஊரக பணியில் முதுகலை பட்டயப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக, www.tnpsc.gov.in என்ற முகவரியில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதவிக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 15ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடைபெறும். முற்பகல் மற் றும் பிற்பகல் என இத்தேர்வு நடக்கும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 26ம் தேதி. மற்ற விவரங்களை தேர்வாணையத் தின் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
November 30, 2014
TNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment