scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 20, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

         "ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல்  காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்  அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய  (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

            டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும்,மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை,அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத
மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
           12 ஆயிரம் இடங்கள்மட்டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும்சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்றநம்பிக்கையில் உள்ளனர். தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்த பணி நியமனத்தின்போது, முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள், எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு, டி.ஆர்.பி., முன்வரவில்லை.
          எனினும், இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில்தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து, இட ஒதுக்கீடு வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர். தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலிபணியிடங்களை நிரப்பும்போது, முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும், டி.இ.டி.,தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று, அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து, அதில்,அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு,டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment