கடந்த ஆண்டு, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ்களை
சமர்ப்பிக்காத மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு,
கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில், நேற்று, சான்றிதழ்
சரிபார்ப்பு துவங்கியது.கடந்த ஆண்டு நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப்
பிறகே, பல கல்லூரிகளில், மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. இதனால்,
தேர்வில் வெற்றி பெற்றும், ஏராளமானோர், சான்றிதழ்
சரிபார்ப்பில்பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்க,
டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் உத்தரவிட்டார்.அதன்படி, 680 பேருக்கு,
சான்றிதழ் சரிபார்க்கும் பணி, சென்னை, அசோக் நகர், மகளிர் மேல்நிலைப்
பள்ளியில், நேற்று துவங்கியது. இடைநிலை ஆசிரியர் தேர்வில், 171 பேரை
அழைத்ததில், 44 பேரும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 162 பேரை அழைத்ததில்,
141 பேரும் பங்கேற்றதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து
இன்றும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.இரு நாட்களில் பங்கேற்காத
தேர்வர்கள், கடைசி நாளான, 10ம் தேதிநடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்கலாம் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. சான்றிதழ்
சரிபார்ப்பு செய்து முடிக்கப்படும் தேர்வர்களுக்கு, உடனடியாக, டி.இ.டி.,
சான்றிதழ் வழங்கப்படும் என்றும், கடந்த மாதம் நடந்த, டி.இ.டி., தேர்வு
முடிவுகளுடன், இவர்களுடைய முடிவுகளும் சேர்க்கப்பட்டு, இறுதி தேர்வுப்
பட்டியல் தயாரிக்கப்படும் என்றும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment