இந்தத் தேர்வுக்கு செப். 5 முதல் இணையதளத்தில் www.tnpsc.gov.in விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். குரூப்-2 முதல் நிலைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.
குரூப் 2 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்தை அக்.,8ம் தேதிக்குள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment