1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.
2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
கொள்ளுங்கள்.
3. உங்கள் சர்டிபிகேட் அனைத்தையும் மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.
4. நீங்கள் பணியில் சேர போகும் பள்ளியில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று தெரிந்திருந்தால் அதற்கேற்ப இனிப்பு வாங்கி கொள்ளவும்.
5. காலை 9 மணிக்கு நீங்கள் பணியில் சேர வேண்டிய பள்ளிக்கு சென்று விடவும்.
6. பணிநியமன ஆணையை மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.
7. எஸ்.ஆர் புக் அதிக பக்கம் உள்ளது வாங்கி கொள்ளவும்.
8. இரண்டு புகைப்படங்கள் கொண்டு செல்லவும்.
9. அழகான ஆடை அணிந்து செல்லுங்கள்.
10. உங்கள் பள்ளி தொலைவில் இருந்தால் உணவையும் குடிநீரையும் கொண்டு செல்லுங்கள்.
No comments:
Post a Comment