ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.“பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால் தகுதித் தேர்வில் 5 சதவீத தளர்வு வழங்கியதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்தபின்பு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று தமிழக அரசு கருதியுள்ளதை ஏற்க இயலாது. சமூக நீதி என்பதைஇதில் எதிர்பார்க்கவேண்டியதில்லை” என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் தளர்வு அரசாணைப்படி மதிப்பெண் சலுகை பெற்று பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment