ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டி.பி.ஐ. அலுவலகத்தில் தினமும் போராட்டம் நடத்திய இவர்கள் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்க இன்று காலையில் புறப்பட்டுச் சென்றனர்.
இதையறிந்த அதிகாரிகள் தேர்தல் ஆணைய அலுவலக கதவை பூட்டிக் கொண்டனர். வெளியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் நின்று, ஆசிரியர்கள் உள்ளே நுழைந்து விடாதபடி பார்த்துக் கொண்டனர்.
ஆனாலும் 300–க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோஷம் போட்டுக் கொண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அத்து மீறி உள்ளே நுழைந்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதனால் ஆசிரியர்கள் தேர்தல் ஆணையத்துக்கு செல்லாமல் அதன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற சேலத்தை சேர்ந்த சசிகலா என்ற ஆசிரியைக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு அங்குள்ளவர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். இதனால் போராட்டத்தில் பரபரப்பான நிலை காணப்பட்டது.
No comments:
Post a Comment