scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 19, 2014

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 பணியாளர்களுக்கும், வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ,
மாற்றுப் பணி வழங்க வேண்டும் என நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பணி நியமனத்தின்போது, வயது வரம்பை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது என்றும், கல்வித் தகுதி அடிப்படையில், அரசுத் துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபருக்குள் பணி வழங்காவிட்டால், அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் வரை, பணி நீக்கம் செய்யப்பட்டபோது, பெற்ற சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011 ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க உத்தரவிட்டது. அதனை ஏற்க மறுத்த மக்கள் நலப் பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியபோது, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க ஆணையிட்டது. இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment