'மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம் வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. துறையின் அறிவிப்பு: தற்போது, அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர், திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, 18ம் தேதி முதல் (நேற்று), வரும் 28ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம், 50 ரூபாயை, பள்ளி தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.இந்த தேர்வுக்கு பின், இரண்டாம் கட்ட தேர்வை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) நடத்தும். இதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, பி.எச்டி., வரை, மத்திய அரசின் கல்வி உதவிதொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
August 19, 2014
10ம் வகுப்பு மாணவர்கள் - திறனாய்வு தேர்வு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment