scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 06, 2014

தாள்-1 மதிப்பெண்கள்/பெயர்/பாடப்பிரிவுகள் திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்காக


முதலில், நான் மதிப்பெண் திருத்தத்திற்காகச் சென்று வந்த அனுபவங்களையும், அங்கு வந்த பிறரது அனுபவங்களையும் சேர்த்து நான்/நாங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகளால் மட்டுமே இந்த பதிவு.

1) டிஆர்பி இணையதளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் பக்கத்தை நான்கு படிகள் எடுத்துச் செல்லுங்கள். மூன்று அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். மீதமுள்ள ஒரு படி உங்களுக்காக என்று நான் சொல்கிறேன்.


2) மதிப்பெண் திருத்தம் என்றால், சான்றிதழ்கள் அத்தனையும் இரண்டு படிகளை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். நீங்கள் கூடுதலாக இன்னொரு படி எடுத்துச் செல்வது நல்லது. பட்டய படிப்பில் மதிப்பெண்களில் திருத்தம் என்றால், ஆண்டு வாரியாக பாடத்தின் பெயர்/பாட குறிப்பு எண் எழுதி அதில் பெற்ற மதிப்பெண்கள், மதிப்பெண்களின் கூடுதல், அதன் சதவிகிதம், அந்த சதவிகிதத்தைக் கொண்டு வெயிட்டேஜ் கணக்கிடுவது அனைத்தையும் ஒரு தாளில் குறித்துச் செல்வது நல்லது. அது உங்கள் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும். இல்லாவிடில் கூடுதலாக பத்து நிமிடங்கள் வரை எடுக்கும். குழப்பங்களும் நேரலாம்.

3) பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் என்றாலும் அதற்குரிய சான்றிதழ்களையும் இரண்டு படிகள் எடுத்துச் செல்லுங்கள்.

4) தேவையான எல்லா சான்றிதழ்களையும் கூடுதலான படிகளும், அட்டெஸ்டேஷனும் பெற்றுச் செல்லுங்கள்.

இதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் எல்லாவற்றையும் ஒன்றுக்கு நூறு முறை கூட சரி பார்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் அமைப்பு அத்தகையது. நான் சென்ற அன்று திருத்தத்துக்கு வந்திருந்த ஒருவர் படித்தது இளநிலை கணிதம், ஆனால், அவர் வேதியியல் பாடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வந்திருந்தது. இன்னொருவருக்கும் இது போலவே. தாள் ஒன்றைப் பொருத்தவரை இந்தக் குழப்பம் இல்லையெனினும் எப்படி வேண்டுமானாலும் குழப்பம் வரலாம், ஏனெனில் நீங்கள் தொடர்பு கொண்டிருப்பது.

இறுதியாக, உங்கள் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளியானது எங்கு இருக்கிறது, அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா என்பதை சரிபார்த்துச் செல்லுங்கள். (விழுப்புரத்தில் முதல் இரண்டு நாட்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்று தெளிவாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி என இருந்தது, நாங்கள் விசாரித்த வரை அப்படி ஒரு பள்ளி இல்லை, காமராசர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தான் இருக்கிறது என்றார்கள். அங்கு சென்றாலும் அப்படி ஒரு சம்பவம் இங்கே நடக்கவே இல்லை என்று அப்பள்ளியின் தலைமயாசிரியர் கூறுகிறார். பிறகு பார்த்தால் அதுவும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிதானாம்.)

மற்றபடி ஒன்றும் இல்லை.

சென்று வந்த பிறகு உங்கள் குழப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment