பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இடங்களில் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ஆம் தேதி இணையதளம் வாயிலாக நடத்தப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 600 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 9 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
No comments:
Post a Comment