ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி
மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன். பொதுச்செயலாளர் ராஜ்குமார்) அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.
மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது. அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.
இவன்
தா.வாசுதேவன். மாநிலத் துணைத் தலைவர். அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம் மாவட்டம்.
No comments:
Post a Comment