scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

July 29, 2014

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.
'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது.இதற்கு,ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால்,
தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்.

பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment