scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

June 17, 2014

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவைச் சேர்ந்த, 110 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீடாக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதுதவிர, தனியார் கல்லூரிகள் மாநில ஒதுக்கீட்டுக்கு தரும் இடங்களும் சேர்த்து, கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல், சமீபத்தில் கடலில் வெளியிடப்பட்டது. 132 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தனர். மொத்தம், 27,539 பேர், போட்டியில் உள்ளனர்.
கலந்தாய்வு:

மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில், இன்று துவங்குகிறது. முதல் நாளில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள் என, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. சிறப்பு பிரிவில், மொத்தம், 110 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது. ''கலந்தாய்வுக்கு வருமாறு, அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்களும், தர வரிசைப்படி, உரிய நாளில் வந்து பங்கேற்கலாம். விவரங்கள் தேவைப்படுவோர், தீதீதீ.tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்,'' என, மாணவர் சேர்க்கை செயலர், சுகுமார் தெரிவித்தார்.
175 இடங்களுக்கு சிக்கல்:
தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், 100 இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் அனுமதி தரவில்லை. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில், 50 கூடுதல் இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில், 25 கூடுதல் இடங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், 175 இடங்கள் போக, மீதமுள்ள, 2,380 இடங்களுக்குத் தான் அனுமதி உள்ளது. இதில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீத இடங்கள் போக (357 இடங்கள்), மீதமுள்ள, 2,023 இடங்களுக்குத்தான் முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
நம்பிக்கை:
'அடுத்த, கவுன்சிலுக்கு முன், மற்ற இடங்களுக்கும் அனுமதி கிடைத்து விடும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment