பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்
திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன.
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment