scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

June 23, 2014

எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின: காத்திருப்போர் பட்டியலில் 2,200 மாணவர்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு உரிய அனைத்து இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன.
சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்தும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. சிறப்புப் பிரிவினர், பொதுப் பிரிவினர் என அனைவருக்கும் கடந்த ஆறு நாள்களாக கலந்தாய்வு நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முடிவுக்கு வந்துள்ளது.

காத்திருப்போர் பட்டியல்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர விரும்பும் மாணவர்களுக்கான காத்திருப்போர் பட்டியலில் சுமார் 1,500 பேர், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான காத்திருப்போர் பட்டியலில் சுமார் 700 பேர் என மொத்தம் 2,200 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி: எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் நூற்றக்கணக்கான மாணவர்கள் இடம்பெற்றுள்ளதால், முதல் கட்ட கலந்தாய்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இதனால்தான் 2,200 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
திருவாரூர், திருச்சி, சேலம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதுப்பித்தல் அனுமதி கிடைக்காததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் சேர்க்கப்படவில்லை; இந்தக் கல்லூரியிலிருந்து தமிழக ஒதுக்கீட்டுக்கு 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். இதே போன்று திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் 50 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சேலம் அரசு மருத்துக் கல்லூரியின் 25 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவையும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதுப்பித்தல் அனுமதி கிடைக்காததால் சேர்க்கப்படவில்லை.
எனவே திருவாரூர், திருச்சி, சேலம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் அனுமதி கிடைக்கவுள்ள 160 எம்.பி.பி.எஸ். இடங்களில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: முதல் கட்ட கலந்தாய்வின்போது இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதுப்பித்தல் அனுமதியைப் பெறாத சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பிஎஸ். இடங்கள் உள்பட ஆறு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 462 சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது நிரப்பப்படும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது? அரசு எம்.பி.பி.எஸ்.-சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.-சுயநிதி அரசு பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment