scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

June 23, 2014

விளையாட்டு வீரர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று தொடக்கம்:

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்குகிறது. விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.என்ஜினீயரிங் கலந்தாய்வு தமிழ்நாட்டில் உள்ள 600 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 லட்சம் உள்ளன. அந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை வருடம் தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி இந்த வருடம் கலந்தாய்வை நடத்துவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் த யாரித்து அண்ணாபல்கலைக்கழகம் கடந்த 16-ந்தேதி வெளியிட்டது. இன்று விளையாட்டுமாணவர்களுக்கு தொடக்கம்இன்று (திங்கட்கிழமை) விளையாட்டில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு என்ஜினீயரிங் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு நாளை முடிவடைகிறது.25-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்காக கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 9-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதி வரை பிளஸ்-2 தொழில்கல்வி படித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 27-ந்தேதிபொது கலந்தாய்வு1 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பொது கலந்தாய்வு வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. திருவிழாபோல நடைபெறும் இந்த கலந்தாய்வு ஜூலை மாதம் 28-ந்தேதி முடிவடைகிறது. கலந்தாய்வுக்கு வருபவர்கள் என்ன என்ன சான்றிதழ்கள் கொண்டுவரவேண்டும் என்ற விவரம் அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். துணைவேந்தர்கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment