scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 02, 2014

தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்களே,ஒரு நிமிடம்..

அரசுப் பள்ளிகளின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..சிந்தியுங்கள்..நல்ல முடிவினை எடுங்கள்..
♦ அரசு பள்ளிகளில் 1 & 2 வகுப்புகளில் ஆங்கில
வழி க்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
♦ 1 முதல் 12 வகுப்பு வரை பெற்றோர்களிடம் எவ்வித கட்டணமும் வாங்கப்படுவதில்லை.
♦ எல்லா மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடுமின்றி இலவச பாடநூல்கள்,ஏடுகள்,காலணிகள்,சீருடைகள்,புத்தகப் பைகள்,வண்ணக் கோல்கள்,மிதி வண்டிகள்,மடிக் கணிணிகள் அவரவர் வகுப்புகளுக்கேற்ப வழங்கப்படுகின்றன.
♦சிறுபான்மையின மாணவர்களுக்கு வருடந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றன.மேலும்,மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவச் செல்வங்களின் பெயரில் வங்கிகளில் பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது.
♦ ஆசிரியர்களிடம் எளிமையாக பழக முடியும்.பொருள் புரியாமல் மனனம் செய்து ஒப்புவிக்கும் கடினமான சூழல் இல்லை.
♦ முதல் வகுப்பில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் 12ம் வகுப்பினை அவர்களது குழந்தைகள் நிறைவு செய்யும்போது (12 * 30000 = 360000) இதர போக்குவரத்து,சீருடை செலவுகளுடன் ரூ.4,00,000.00 தோரயமாக செலவு செய்யக் கூடும்.ஆனால்,அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு இச் செலவு இல்லை.இத் தொகையை குழந்தைகளின் பெயரிலேயே வங்கிகளில் சேர்த்து வைத்தால் அவர்களது மேல் படிப்பிற்கோ,திருமண செலவுகளுக்கோ பயன்படுத்தலாம்.
♦ ஆங்கிலம்/தமிழ் வழிக் கல்விகளில் எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
♦ நடுநிலைப்பள்ளிகளில் கணிணி ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் மூலமாக சிறப்புத் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.
♦ மாற்றுச் சான்றிதழ்கள் ஏதுமின்றி குழந்தைகளின் வயதிற்கேற்ப நேரடியாக அவர்களுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
♦ மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகின்றன.சிறப்பு மருத்துவ பயிற்சிகளும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.
♦ சத்தான மதிய உணவு முட்டையுடன் வழங்கப்படுகின்றன.
♦ ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வருடந்தோறும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
♦ செஞ்சிலுவைச் சங்கங்கள்,தேசிய பசுமைப் படை போன்ற சமுதாய சேவை அமைப்புகளும் செயல்படுகின்றன.
♦ திறமையான இளம் ஆசிரியர்களாலும்,அனுபவம் வாய்ந்த முதிய ஆசிரியர்களின் வழிகாட்டலினாலும் மாணவர்கள் கற்றலில் சிறப்படைகின்றனர்.
♦ மாணவச் செல்வங்கள் இயல்பாக,எளிமையாக,மகிழ்ச்சியாக, குழந்தைத்தனமாக கல்வியைக் கற்கலாம்.எவ்வித அழுத்தமும் இன்றி கற்கலாம்.
♦ படைப்பாற்றல் கொண்ட வலிமையான பாரதம் உருவாக, சுயமாக சிந்திக்கும் மாணவ சமுதாயம் உருவாகிட, தைரியமான மனநிலை பெற்ற வருங்காலம் தழைத்திட அரசு பள்ளிகளில் சேர்த்திட அன்புடன் வேண்டுகிறோம்.
♦ அரசு கல்லூரிகளில் மட்டும் சேர்க்க விரும்பும் அனைவரும் அரசுப் பள்ளிகளிலும் சேர்க்க விரும்புவோம்.

No comments:

Post a Comment