ஜூன், 14ம் தேதி
நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு, இணையதளம் வழியாக,
இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய
(டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான வரும்,
15க்குள், மேலும் 5 லட்சத்திற்கும், அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் எனவும்,
தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.
தமிழக வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 17ல், வெளியானது. அன்றிலிருந்து, வரும் 15 வரை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமானோர் போட்டி:
இந்த வேலைக்கு, 10ம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், வழக்கம் போல், ஏராளமானோர் போட்டி போட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 15 நாளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது. கடைசி நாளான, வரும் 15க்குள், மேலும், ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், அத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே, மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment