மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே
மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு விண்ணப்பம் கோவில்பட்டி
கல்வி மையத்தில் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கை: தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி, தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18.
2011, 2012, 2013-ல் சேர்ந்த இளங்கலை மாணவர்கள் முறையே மூன்றாம், இரண்டாம், முதலாம் ஆண்டு தேர்வுக்கும், கல்வியாண்டு 2012 - 2013-ல் சேர்ந்தவர்கள் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
2012 மற்றும் 2013-ம் ஆண்டிற்கு முன்பு சேர்ந்தவர்கள் தேர்வில் தவறிய அல்லது விடுபட்ட தாள்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்திட 2 புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் கோவில்பட்டி கல்வி மையத்தை அணுகவும்.
மேலும், 01-01-2014-ம் ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என தனது அறிக்கையில் கூறியுள்ளார்

No comments:
Post a Comment