பிளாஸ்டிக் குடிநீர் , குளிர் பானம் பாட்டில்களை, ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவதால்,புற்று நோய் காரணிகளை வெளிப்படுத்துகிறது.இதை தவிர்க்க, பாட்டில்களின் அடியில் குறிப்பிட்டுள்ள,எண்ணை கண்டறிந்து,5ம் எண்ணுக்கு மேல் இருந்தால்,அந்த பட்டில்களை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தலாம்.
நமது அன்றாட வாழ்க்கையில், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர் பானங்களை பயன்படுத்துகிறோம். பாட்டிலில் உள்ள குடிநீர், குளிர்பானங்கள் எதுவும், தீங்கு விளைவிக்கவில்லை.
ஆனால், பாட்டில்களை சூரியஒளி படும்போது, தேய்க்கும் பொழுது, வெந்நீரால்
கழுவும் போது, பாட்டில்கள் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களில் இருந்து, புற்றுநோய் காரணிகளை வெளிப்படுத்துகிறது.
குடிநீர், குளிர்பான பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு, குப்பை தொட்டியில் சேர்க்க வேண்டும். ஆனால் சிலர், அதன் அபாய தன்மை பற்றி அறியாமல், தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தண்ணீர் பாட்டில் வாங்கும் செலவை குறைப்பதாக கருதி, பயன்படுத்திய பாட்டில்களை சிலர் வைத்துள்ளனர். குறிப்பாக, பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர், பயணம் செய்வோர் என பலரும், இதுபோன்ற பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை, தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
இவ்வகை பிளாஸ்டிக் பாட்டில்கள், "பாலி எத்திலீன் டெரிப்தலேட்' என்ற பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்டவை. இதில், புற்றுநோய் உருவாக்க காரணமான "டை எத்தில் ஹைட்ராக்சில் அமின்' எனும் வேதிப்பொருளை உள்ளடக்கி உள்ளது.
இப் பாட்டிலை , நாள் கணக்கிலோ, வாரக்கணக்கிலோ வைத்திருக்கும் போது, எவ்வித நச்சையும் வெளிப்படுத்துவது இல்லை. பாட்டிலை திறந்து, அதில் உள்ள பொருளை பயன்படுத்திய பின், சூரிய ஒளி காரணமாக வெப்பம் ஏற்படும் போதோ, கழுவுதல் போன்ற செயல்பாடுகளால், "டை எத்தில் ஹைட்ராக்சில் அமின்' எனும் வேதிப்பொருள் சிதைந்து, புற்றுநோய் காரணிகள், பாட்டில் உள்ள நீரோடு கலந்து வெளியேறும். இதில் உள்ள நீரை குடிக்கும் போது பாதிக்கப்படுவோம் என, அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வகை குடிநீர் பாட்டில்களை, நேரடியாக சூரிய வெளிச்சத்தில் வைக்க கூடாது. ஒருமுறை குடித்தபின், அவற்றை திரும்ப பயன்படுத்த கூடாது என, விழிப்புணர்வு வாசகங்கள் கூட, பாட்டிலில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் யாரும்,இந்த எச்சரிக்கையை கண்டு கொள்வது இல்லை.இனியாவது இதை கண்டறிந்து,ஒரு முறை பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தாது,உடல்நலத்தை காக்கலாமே...
திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவேல், ""பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை,
மீண்டும் மாணவர்கள் பயன்படுத்த கூடாது என, பள்ளியில் வலியுறுத்துகிறோம். எங்கள் மாணவர்கள் 90 சதவீதம் பேர் பயன்படுத்துவது இல்லை.
தரமான குடிநீர் பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர். பாட்டில்களின் அடியில், முக்கோண அடையாளமிட்டு, அதில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 5ம் எண், அதற்கு மேல் இருந்தால், அப்பாட்டில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகும்.
எண் 5க்கு கீழ் இருந்தால், அது விஷ தன்மையை வெளியேற்றும் பாட்டிலாக இருக்கும். நாம் வாங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களில் பெரும்பாலும், 1ம்நம்பர் வகையை சார்ந்தவை. அனைத்து தரப்பினரும், இதை புரிந்து, தரமான பாட்டில்களை பயன்படுத்தி, தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
பாட்டில்களின் அடியில், முக்கோண அடையாளமிட்டு, அதில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 5ம் எண்,அதற்கு மேல் இருந்தால், அப்பாட்டில் மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகும். 5க்கு கீழ் எண் இருந்தால், அது விஷ தன்மையை வெளியேற்றும் பாட்டிலாக இருக்கும்.இதை ஒரு முறையே பயன்படுத்த வேண்டும்.

No comments:
Post a Comment