scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 05, 2014

மனோன்மணியம் பல்கலைக்கழக நவம்பர் மாத தேர்வு முடிவுகள் வெளியீடு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொலைநெறி தொடர்கல்வி மூலம் பயின்று நவம்பர் 2013-தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.msuniv.ac.in என்ற பல்கலை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக, கூடுதல் தேர்வாணையர் அர.மருதக்குட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது:
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், இதற்குரிய விண்ணப்பத்தை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதற்குரிய கட்டணத்தை( தாள் ஒன்றுக்கு ரூ.250) பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும், பவர் ஜோதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு நிதி கணக்கு எண்.32723644186 என்ற எண்ணில் கட்டி, அதற்கான செல்லானை, விண்ணப்ப படிவத்துடன் இணைத்து, தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-627 012 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment