scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 19, 2014

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

இது குறித்து தமிழ்நாடு அசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள் கூறியாதவது: பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது. அண்மையில் இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது. 
ஏற்கனவே நிலுவையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கல்விதுறைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வருகிற 22ம் தேதி கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment