scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 12, 2014

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் இன்னும் 15 நாள்களில் நிரப்பப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் இன்னும் 15 நாள்களில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூரை அடுத்த மெட்டுகுளத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தக் கல்வித் துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர் களுக்கு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கருத்தாளர்கள் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விழாவில், 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை பெற்ற 18 அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் கேடயம் வழங்கி அமைச்சர் பேசியது:
தமிழகத்தில் நடைபெறும் 6-வது மண்டலக் கூட்டம். இதில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில், 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 662 பேர் பங்கேற்றுள்ளீர்கள். கல்வித்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டலத்தில் இத்தகைய நிலை நீடிக்கக் கூடாது.
இங்கு கருத்தாளர்கள் தெரிவித்த யோசனைகளைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் நிலையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வர் இந்த முறை பொறுப்பேற்றபோது தமிழகத்தில் 63 ஆயிரத்து 125 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. கடந்த இரு ஆண்டுகளில் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளார். மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் 15 நாள்களில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை முதல்வர் நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளில் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியுள்ளார். இன்னும் நிலுவையில் உள்ள ஒரு சில கோரிக்கைகளும் முதல்வரின் பரிசீலனையில் உள்ளன.
கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பள்ளிக் கல்வியில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் ரூ.45 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஆசிரியர் பணி கடுமையான பணியாக இருப்பினும், அதில் சமூக சேவை மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் பலர் பணிபுரிகின்றனர். அந்த நிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. ஆசிரியர்கள் நினைத்தால் நாட்டில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்த முடியும் என்றார் வீரமணி.
முதன்மைச் செயலர் த.சபிதா
முன்னதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா பேசியது: மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வுகளில் 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். 10-ம் வகுப்புத் தேர்வை 11.6 லட்சம் மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை 8.8 லட்சம் மாணவ, மாணவியரும் எழுதவுள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய இத்தேர்வில் அவர்கள் நல்ல தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நடப்பாண்டில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த தேர்ச்சி விழுக்காட்டை எட்டுவதற்கு ஆசிரியர்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சபிதா.
தலைமை ஆசிரியர்
கெüரவிப்பு
வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னப்பள்ளிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயவேலு, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவீத தேர்ச்சி பெற வைத்ததற்காக அமைச்சர் மற்றும் முதன்மைச் செயலர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கிக் கெüரவித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குநர் மாதேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், ஆட்சியர் இரா.நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment