ஆசிரியர்கள் இன்றி கல்வி கற்பித்தல் என்பது தரமில்லாத கல்வி. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபோதும் ஆசிரியராக முடியாது" என, பல்கலை மானியக்குழு
துணைத்தலைவர் தேவராஜ் பேசினார். திருமலையாம்பாளையம் நேரு கல்லூரி வளாகத்தில், 2013ம் ஆண்டுக்கான பி.கே.தாஸ் நினைவு சிறந்த பேராசிரியர் மற்றும் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கும் விழா நடந்தது. டில்லி, பல்கலை மானியக்குழு துணைத்தலைவர் தேவராஜ், தலைமை வகித்து பேசுகையில்,"ஆசிரியர்கள் என்றும் மாணவர்களே என்பதற்கேற்ப, காலத்திற்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் இன்றி கல்வி கற்பித்தல் என்பது தரமில்லாத கல்வி. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபொழுதும் ஆசிரியராக முடியாது. நமது நாட்டு இளைஞர்களின் அறிவு, வெளிநாடுகளில் பயன்பட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சிறந்த அரவணைப்பு, பணி பாதுகாப்பு மற்றும் நன்மதிப்பு வழங்கினால் நமது நாடு சிறந்து விளங்கும்" என்றார்.முதுநிலை பிரிவில் திருச்சி, பிஷப் ஹைபர் கல்லூரியின் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன்,காரைக்குடி அழகப்பா பல்கலையின் அன்பழகன், கோவை பாரதியார் பல்கலையின் பொன்பாண்டியன், தனபாக்கியம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியின் நசீரா, கொச்சி பல்கலையின் முகமது ஹத்தா, சென்னை சர் தியாகராயா கல்லூரியின் பழனிசாமி உட்பட 16 பேருக்கும், இளநிலை பிரிவில் 13 பேருக்கும், சிறந்த பேராசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.மேலும், கேரளா பல்கலையின் சந்திரசேகர், கோவை வேளாண் பல்கலையின் குமார், பாரதியார் பல்கலையின் மனோகரன், சென்னை "வெல்டெக்" பல்கலையின் கண்ணன் ஆகியோருக்கு, "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment