2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில் அரசு
மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,
அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள்
கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5
ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2013-14
கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கு முன்பாகவே காலியிடங்களை நிரப்ப
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே, முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியான (பட்டதாரி ஆசிரியர்) பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது, அப்பட்டியலில் திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து, அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இப்பட்டியல் இறுதி செய்த பின், அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு "கவுன்சிலிங்' தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை, பட்டதாரியில் இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
எஞ்சிய இடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம் நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின் துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment