லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு
தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்ய, தொடக்க கல்வித்துறையினர்
தயாராகி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற
உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமைஆசிரியர்கள், தங்களது
பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து, ஒவ்வொரு வட்டார
தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,
குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளாதா?
எந்த மாதிரியான கட்டடம், மராமத்து பணி தேவையா என்பது குறித்து
விளக்கமும் பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன்
கேள்விக்கு ஆசிரியர்கள் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளனர்.
ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்
குறித்தும் தேர்தல் கமிஷன் கேள்விகள் கேட்டு உள்ளது. ஜனவரிக்குள்,
பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவும் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு பள்ளிகளை தொடக்க
கல்வித்துறையினர் தயார்படுத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment