தமிழகம் முழுவதும் மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியில் 358
சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மத்திய அரசு மாதிரி
பள்ளிகள்(ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா) திட்டத்தை நாடு முழுவதும்
செயல்டுத்தி வருகிறது. இதன் மூலம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்,
தனியார் இணைந்து இந்தியா முழுவதும் வட்டாரத்திற்கு ஒரு பள்ளி வீதம் 2,500
சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க உள்ளன.
ஏற்கனவே தனியார் நடத்தி வரும் பள்ளிகளையே
மாதிரி பள்ளியாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது புதிய பள்ளிகள் திறக்கலாம் என
அறிவிக்கப்பட்டது.
40 சதவீதம் மாணவர்கள் அரசு சார்பிலும், 60 சதவீதம் பேர் பள்ளி
நிர்வாகத்தாலும் சேர்க்கப்படுவர். இப்பள்ளிகளுக்கு மாணவர்கள் நுழைவுதேர்வு
மூலமே சேர்க்கப்படுவர். இதுகுறித்து மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை
தெரிவிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது. ஆனால் தமிழக அரசு எந்த
தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழ் நாட்டில் 358 பள்ளிகள்
திறக்கப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக திறக்கப்பட
உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை வருமாறு: சென்னை 9, கோயம்புத்தூர் 21, கடலூர்
11, தர்மபுரி 5, திண்டுக்கல் 14, ஈரோடு 13, காஞ்சிபுரம் 13, கன்னியாகுமரி
9, கரூர் 7, கிருஷ்ணகிரி 6, மதுரை 15, நாகப்பட்டினம் 11, நாமக்கல் 13,
பெரம்பலூர் 8, புதுக்கோட்டை 13, ராமநாதபுரம் 11, சேலம் 8, சிவகங்கை 11,
தஞ்சாவூர் 14, நீலகிரி 4, தேனி 8, திருவள்ளுர் 14, திருவாரூர் 10,
தூத்துக்குடி 13, திருச்சி 15, திருநெல்வேலி 19, திருவண்ணாமலை 17, வேலூர்
21, விழுப்புரம் 14, விருதுநகர் 11.
No comments:
Post a Comment