****************************************
தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் இலாகாவில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கூடுதல் பொறுப்பாக பொதுப் பணி, நீர்ப்பாசனத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பணித் துறையை இதுவரை கவனித்துவந்த அமைச்சர்
கே.வி.ராமலிங்கத்துக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையுடன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் பொறுப்பு வகித்திருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, இனி பள்ளிக்கல்வித் துறையை மட்டும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையுடன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் பொறுப்பு வகித்திருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, இனி பள்ளிக்கல்வித் துறையை மட்டும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment