அரசு,
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு
படிக்கும்ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும்
ஊக்குவிப்புத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
2013-2014ஆம் ஆண்டுபெண்கல்வி
ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை மற்றும் 6-ஆம்
வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவிகளுக்கு வழங்கும்
பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை 7-ஆம் வகுப்புமற்றும் 8-ஆம்
வகுப்புக்கும் விரிவுப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 7-ஆம்
வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புப் பயிலும் ஆதிதிராவிட, பழங்குடியின
மாணவிகளுக்கு மாதம்ரூ. 150 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 1,500
வழங்கஅனுமதிக்கப் பட்டுள்ளது
எனவே,
மாணவியரின் பெயரில் வங்கிக் கணக்கு அல்லது மாணவியின் தாயின் பெயரில்
அஞ்சலகக் கணக்கு துவக்கப்பட்டு, மேற்படி கணக்குஎண் விவரம் விண்ணப்பத்துடன்
இணைக்கப்பட வேண்டும்.இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத் திட அனைத்து அரசு
பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விரைந்து செயல்பட
வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment