முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ்வழக்குகள் இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார் அன்றையதினம் மூன்று வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக் 21 மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
No comments:
Post a Comment