காந்தி ஜெயந்தியை முன்னிட்டு
பள்ளிகளில் புதுமை விழா கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட
முதன்மைக்கல்வி
அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர்
வி.சி.ராமஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவ, மாணவிகள்
மத்தியில் பிறருக்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தவும், சமூக
ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகளையும், கருத்துக்களையும்
பரிமாறிக்கொள்வதற்கும், கொடுத்து மகிழும் விழாவை (ஜாய் ஆப் கிவ்விங்) அனைத்து பள்ளிகளிலும்
வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாட வேண்டும்.
இந்த விழாவை கொண்டாடும் வகையில் மாணவ, மாணவிகள் கீழ்காணும்
செயலில் ஈடுபடலாம். தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யலாம்.
முதியவர்கள் சாலையை கடக்க உதவலாம்.
அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர்
இல்லத்திற்கு சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடலாம். பெற்றோருக்கு வீட்டு
வேலைகளில் உதவி செய்யலாம். முதியோர்களுக்கு தினசரி நாளிதழ்களை வாசித்து காட்டலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment