தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப்
பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும்
"பிச்சை எடுக்கும் போராட்டத்தை" அறிவித்தும், தொடர் முயற்சிகள் செய்தும் "பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பாணை
வெளியிடப்படாத காரணத்தால் இம்மாதம் (ஆகஸ்ட் 2013) முதல் தமிழகம் முழுவதும் SSA கணக்குத் தலைப்பின் கீழ் (AD-101) ஊதியம் பெறும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக்
கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட
நிலுவைச் சம்பளங்களையும் இன்றே (29.8.13) வழங்கவும் இனிமேல் எந்த ஒரு அரசாணையையும் எதிர்பாராமல் ஆசிரியர்களின்
ஜீவாதாரமான, ஊதியப் பட்டியல்களுக்கு மறுப்புரையின்றி கடவாணை வழங்கவும் கருவூலத்துறை
ஆணையாளர் அவர்களால் சார்நிலைக் கருவூலங்களுக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment