பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு என்ற இப்போதைய சூழ்நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக சொல்லப்பட்டு வரும் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்ற, முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரெல்லாம் மழை பெய்து, அணைகள் நிரம்புகின்றன. உபரி நீர் திறக்கப்பட்டு கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், ஒட்டகத்தின் முதுகு போல், பூகோள வரையறையில் சிக்கிய மேட்டுப்பகுதியில் உள்ள அவிநாசி வட்டாரம், தொடர்ந்து காய்கிறது. மழைக்காலங்களில் பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, வாய்க்கால் மூலம் கொண்டு செல்வதே, அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம். கோவை மாவட்டம் காரமடையில் துவங்கி, அன்னூர் வழியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி சென்று, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களிலுள்ள 33 குளங்கள், 300 குட்டைகளில் நீர் நிரம்பும்போது, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறுகளுக்கு தண்ணீர் வரும்; இதனால் விவசாயம் செழிக்கும் என்பது இத்திட்டத்தால் ஏற்படும் நன்மை.
வல்லுனர் குழு:
முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில், அப்போதைய எம்.எல்.ஏ., மாரப்பனால் வலியுறுத்தப்பட்ட இத்திட்டம், இன்னும் கிடப்பிலேயே உள்ளது. கடந்த 2009ல், தலைமை பொறியாளர் (ஓய்வு) மோகனகிருஷ்ணன் தலைமையில், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சிவனப்பன், சீனிவாசன், பத்மநாதன், ஓ.பழனிசாமி, கிருஷ்ணசாமி, நாகராஜன், ஆர்.பழனிசாமி ஆகியோர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு நடத்தி, விவசாயிகளிடம் கருத்து கேட்டது. இறுதி அறிக்கை, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. அதில், "பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், வீணாகும் உபரி நீரை, வாய்க்கால் மூலம் குளம், குட்டைகளுக்கு திருப்பும் திட்டத்தை நிறைவேற்றினால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
அதற்காக, குளம், குட்டைகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாய பரப்பளவு அதிகரிக்கும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையால் விவசாயிகளும், பொதுமக்களும்
மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல்வர் ஜெ., உறுதி:
அதன்பின், திட்டம் பற்றி வேறெந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 2012ல் சட்டசபையில் பேசிய தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, "அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,862 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும், தமிழக அரசு கண்டிப்பாக நிறைவேற்றும்,' என்று அறிவித்தார். விவசாயிகள், பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உத்தேச கால்வாய் அமையும் இடங்களை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து கற்கள் நட்டனர். அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை.
ஊரெல்லாம் தண்ணீர்:
அவிநாசிக்கு வடக்கே பவானி சாகர் நிரம்பி வழிகிறது. தெற்கே, பொள்ளாச்சி, உடுமலையிலுள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி, பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருகே உள்ள பகுதிகளில் அணைகளில் தண்ணீர் ததும்புவதை பார்க்கும், அவிநாசி வட்டார விவசாயிகளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப கோரும் இயக்க செயலாளர் பெரியசாமி கூறுகையில், ""அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு சாதகமான சூழல் இப்போது நிலவுகிறது. திட்டம் பற்றிய கோப்பு, நிதித்துறை செயலரிடம் உள்ளது. தமிழக முதல்வர் நினைத்தால், திட்டத்தை உடனே நிறைவேற்றலாம். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் வீணாக கடலில் கலக்கிறது. கால்வாய் மூலம் குளம், குட்டைகளை இந்த நீர் நிரப்பினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் ஆதாரமாக விளங்கும்; விவசாயமும் நன்கு செழிக்கும்,'' என்றார்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவிநாசி-அத்திக்கடவு திட்டம் குறித்து முழு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை அரசிடம் உள்ளது. வாய்க்கால் செல்லும் பகுதிகளில் கற்கள் நடப்பட்டு அளவீடு செய்துள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்தால், திட்டப்பணிகள் துவக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, வறட்சி
நம்பிக்கை இருக்கிறது:
- நமது சிறப்பு நிருபர் -thinamalar.
No comments:
Post a Comment