தபால்
ஓட்டு நூறு சதவீதம் பதிவு ஆவதை உறுதி செய்ய தபால் ஓட்டு போடக்கூடிய
பணியாளர்களை கணக்கெடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற
தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சதவீதம் பதிவு ஆவதை உறுதி செய்ய தேர்தல்
கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற
தேர்தலில் ஒரு கோடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 10 சதவீதம்
பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர்.
எனவே
2014 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களையும் 100
சதவீதம் வாக்களிக்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல்
கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மத்திய,
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்,
உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், போலீசார், ராணுவத்தினர் ஆகியோரின்
பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதற்காக 15
கேள்விகள் அடங்கிய படிவத்தை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இந்த படிவத்தில்
பணிபுரியும் நிறுவனம், பணியாளரின் விவரம், அடையாள அட்டை ஆகிய விவரங்கள்
கேட்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு மாதமும்
5ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்
பணியாளர் வசிக்கும் தொகுதிக்குள் தேர்தல் பணி வழங்கப்பட்டால் படிவம்
12ஏ,ல் விண்ணப்பிக்க வேண்டும். வேறு தொகுதியில் பணி வழங்கப்பட்டால் படிவம்
12ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவம் 12ஏ,ல் விண்ணப்பித்தவர்கள் அவர்கள்
பணிபுரியும் வாக்குச்சாவடியிலே வாக்களிக்கலாம். இதற்காக அவர்களுக்கு
எலெக்ஷன் டியூட்டி சர்ட்டிபிகேட் வழங்கப்படும். படிவம்12ல்
விண்ணப்பித்தவர்கள் தபால் ஓட்டில் வாக்களித்து சம்பந்தப்பட்ட தேர்தல்
நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். பணியாளர்கள் ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கலாம்
No comments:
Post a Comment