ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது வாரிசுகளுக்கு வழங்கும் உதவி தொகை உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டியிருப்பதாவது:–
ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான, ஊழலற்ற திறமையான மற்றும் பொறுப்புள்ள நிருவாகத்தை அளிப்பதுதான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரசு இயந்திரத்தையும், அதன் பணியாளர்களையும் முழுமையாக பயன்படுத்தி, அரசால் வகுக்கப்படும் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படவும்,
அதன் பலன்கள் யாவும் மக்களுக்கு உரிய நேரத்தில் திட்டமிட்டவாறு சென்றடையச் செய்திடவும் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.
அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையா காது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு பணியாற்றும் பொழுதும், அவர்கள் ஓய்வு பெற்றப் பிறகும் பல்வேறு சலுகைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அளித்து வருகிறது.
ஓய்வூதியதாரர்கள் இறக்கும் பொழுது அவர்களது வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதிய தாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக சென்ற ஆண்டு உயர்த்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டார்.
ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து, ஒய்வூதியதாரர்கள் இறக்கும் போது அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியினை 35,000 ரூபாயி லிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா தற்போது ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர் குடும்பத்திற்கு உதவிகரமாக அமையும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment